கம்பராமாயணம் 6962 · யுத்த 11.26

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி வண்ணன்,
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்,
‘உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த ‘என்னா,
தன் உணர்வு அழிந்து, சிந்தை அலம்வந்து தளர்ந்து, சாய்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

இன்னது ஒர் தன்மை எய்தும் அளவையின் - இத்தகையதோர் ஒப்பற்ற நிகழ்ச்சி, (இப்படி) நடந்து கொண்டிருக்கையில்; எழிலிவண்ணன் - முகில் வண்ணனாகிய இராமபிரான்; மன் உயிர் அனைய காதல் துணைவனை - (தன்) அழியா உயிர் அனைய அன்புத் துணைவனான சுக்கிரீவனுடைய; வரவு காணான் - வருகையைக் காணாதவனாய், உன்னிய கருமம் எல்லாம் உன்னொடும் முடிந்தது என்னா - 'நான் புரியக் கருதியிருந்த செயல்கள் யாவும் உன்னோடும் அழிந்தொழிந்தன' என்று கூறி; தன் சிந்தை அலமந்து - தன் உள்ளம் சுழன்று; உணர்வு அழிந்து - அறிவு ஒடுங்கி, தளர்ந்து சாய்ந்தான் - தளர்ச்சியுற்று வீழ்ந்தான்.

உன்னிய கருமங்கள்: அறந்தலை நிறுத்துதல்; வேத நெறி நிறுத்துதல்; உலகோர் பூணச் செந்நெறி செலுத்துதல், தீயோராம் அரக்கர் குழுவை அழித்தல்; தக்கோரின் இடர்துடைத்தல் (கம்ப. 5885).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While things stood thus, he of the rain-cloud's colour,
  2. not seeing the return of his loving companion, dear as his own enduring life,
  3. crying, 'All the work I had resolved on has ended along with you,'
  4. lost his senses, his mind reeling, and weakened and sank down.

What the poem says

Meanwhile, on Mount Cuvēlam, Irāmaṉ waits for Cukkirīvaṉ to come back. When he does not appear, Irāmaṉ fears that his dear friend has been killed. Overcome, he cries that everything he set out to do has died with him, and he collapses.

The tasks he means, as the epic says elsewhere, are to restore righteousness and the Vedic way, to set the world on the right path, to destroy the wicked demons and to relieve the suffering of the good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉatu ōr taṉmai eytum aḷavaiyiṉ, eḻili vaṇṇaṉ,
maṉṉuyir aṉaiya kātal tuṇaivaṉai varavu kāṇāṉ,
‘uṉṉiya karumam ellām uṉṉoṭu muṭinta ‘eṉṉā,
taṉ uṇarvu aḻintu, cintai alamantu taḷarntu, cāyntāṉ.