கம்பராமாயணம் 6963 · யுத்த 11.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ - என் உணர்வும் உன் உணர்வும் ஒன்றே என்னுமாறு என் உயிரோடு ஒன்றிவிட்ட என் துணைவனே! உன்னை இன்றி - நீயில்லாமல்; யான் உளனாய் நின்று -நான் மட்டும் தனித்து உயிருடன் இருந்து; ஒன்று இயற்றுவது இயைவது அன்று -ஒரு செயல் புரிவதென்பது நடைபெறுவது ஒன்று அன்று; அன்றியும் - அல்லாமலும், (உன் செயலால்); அமரரைத் துயரத்து இட்டாய் - தேவர்களைத் துயரத்தில் நீ தள்ளி விட்டாய்; அரக்கர்க்கு எல்லாம் வென்றியும் கொடுத்தாய் - இராட்சதர்களுக்கெல்லாம் வெற்றிக் (களிப்பை) அள்ளி வழங்கிவிட்டாய்; உன் வெகுளி - (இவ்வாறு) உன்னுடைய சினமானது; என்னைக் கெடுத்தது என்றான் - (உன்பால் உயிரை வைத்திருந்த) என்னை முடித்து விட்டது;
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்” (திருக்கு: 785) என்ற கருத்தினை ஒட்டி, "ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த்துணைவ!” என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My one life's companion, who became one with me in feeling! Without you,
- for me to go on living and achieve anything at all is not possible;
- more than that, you have plunged the gods into grief, and to all the demons
- you have handed victory; your anger has ruined me,' he said.
What the poem says
Irāmaṉ mourns Cukkirīvaṉ. Their friendship was a union of feeling, the kind the Tirukkuṟaḷ calls true friendship, which does not need long acquaintance. Without him Irāmaṉ cannot go on.
He reproaches his friend: by rushing off in anger, Cukkirīvaṉ has given the demons their victory, left the gods in misery and destroyed Irāmaṉ himself.