கம்பராமாயணம் 6964 · யுத்த 11.28

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தெய்வ வெம்படையும், தீரா மாயமும், வல்ல தீயோன்
கையிடைப் புக்காய்; நீ வேறு எவ் வணம் கடத்தி, காவல்?
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே? வாராய் ஆகின்,
உய்வனே? தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே!

பொருள் · Meaning in Tamil

தமியனேனுக்கு - (தேவியைப் பிரிந்து சிந்தை திகைத்துத் தனியனாய்த் தவித்துக் கிடந்த) எனக்கு; உயிர் தந்த உதவியோனே -(தேவி கிட்டுவாள் எனும் நம்பிக்கை தந்து) என் உயிரைத் தந்த உதவியாளனே! தெய்வ வெம்படையும் - தெய்வங்கள் தந்த கொடிய படைக்கருவிகளையும்; தீரா மாயமும் - நீங்காத மாயங்களையும் உடைய, வல்ல தீயோன் - வலியவனான தீயவன் (இராவணன்); கையிடைப் புக்காய் - கரங்களிலே சிக்கினாய், நீ வேறு எவ்வணம் காவல் கடத்தி? - நீ (இனி) வேறு எந்த வகையில் அவன் காவலிலிருந்து தப்ப உள்ளாய்? வாராய் ஆகில் - (நீ அவனிடமிருந்து) தப்பி வாராய் ஆனால், வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே? - ஓர் ஏழு உலகங்களையும் தந்தாலும் நான் உயிர் வாழ இயலுமோ?; உய்வெனோ? - (நீ வாராயாகில் நான் உயிர் வாழ்வேனோ? வாழேன்!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Into the hands of the evil one, master of fierce divine weapons and endless sorcery,
  2. you have fallen; by what other means will you escape his guard?
  3. If I gained all seven worlds, would I live? If you do not come back,
  4. could I survive? You who helped me and gave me life when I was alone!'

What the poem says

Irāmaṉ goes on lamenting. Cukkirīvaṉ has fallen into the hands of Irāvaṇaṉ, who has divine weapons and unending magic. How can he escape?

When Irāmaṉ was alone and despairing after losing Cītai, Cukkirīvaṉ gave him back his will to live by promising to help find her. If Cukkirīvaṉ does not return, Irāmaṉ says, not even all seven worlds could keep him alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘teyva vem paṭaiyum, tīrā māyamum, valla tīyōṉ
kaiyiṭaip pukkāy; nī vēṟu evvaṇam kaṭatti, kāval?
vaiyam ōr ēḻum peṟṟāl vāḻveṉē? vārāyākil,
uyveṉē? tamiyaṉēṉukku uyir tanta utaviyōṉē!