கம்பராமாயணம் 6965 · யுத்த 11.29

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம்; அந்தோ!
என்றானும் யானோ வாழேன். ‘நீ இலை ‘எனவும் கேளேன்;
இன்று ஆய பழியும் நிற்க, நெடுஞ் செருக்களத்தில் என்னைக்
கொன்றாய் நீ அன்றோ? நின்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன்.

பொருள் · Meaning in Tamil

குணங்கள் தீயோன் - தீய குணங்களைக் கொண்ட இராவணன்; உன்னைக் கொல்லுமேல் - சுக்கிரீவனாகிய உன்னைக் கொன்று விட்டானேயானால், என் கருமம் - நான் மேற்கொண்ட செயல்; ஒன்றாக நினைக்க ஒன்றாய் விளைந்தது -நான் ஒருவகையாக நினைக்க அது வேறு வகையாக முடிந்தது ஆகிவிடும்; அந்தோ! - ஐயோ! யானோ என்றானும் வாழேன் - நானோ, (இனி) எந்த வகையிலும் வாழ மாட்டேன்; நீ இலை எனவும் கேளேன் - நீ இல்லை (மறைந்தாய்) என்ற சொற்களைக் கேட்கவும் என்னால் இயலாது; இன்று ஆய பழியும் நிற்க - இன்று; உன்னைப் பகைவனிடத்திலிருந்து மீட்க இயலாத பழியும் எனக்கே சேர; நெடுஞ் செருக்களத்தின் - பெரிய போர்க்களத்தில், என்னைக் கொன்றாயும் - என்னைக் கொன்றவனும்; நீயே - நீயேயாவாய்!

பிராட்டியைப் பெறுவதற்காக எண்ணித் துணிந்த கருமம், நண்பனையிழப்பதில் முடிந்ததே என ஏங்குகின்றான் ஆதலின், "என் கருமம் ஒன்றாக நினைக்க ஒன்றாய் விளைந்தது” என்றான். "ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்" என்பது மூதுரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I intended one thing, and my undertaking has turned out another; alas!
  2. I shall never go on living; I cannot bear to hear "you are no more";
  3. never mind the shame that falls on me today — on this vast battlefield
  4. it is you who have killed me, is it not, if that one of evil nature kills you.'

What the poem says

Irāmaṉ's grief deepens. His plan to win Cītai back has instead cost him his friend. As an old saying has it, you plan one thing and another comes about.

He cannot bear to hear that Cukkirīvaṉ is gone, and he will be blamed for failing to rescue him. If Irāvaṇaṉ kills Cukkirīvaṉ, Irāmaṉ says, then it is Cukkirīvaṉ who has killed Irāmaṉ, because he cannot live without him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘oṉṟāka niṉaiya oṉṟāy viḷaintatu eṉ karumam; antō!
eṉṟāṉum yāṉō vāḻēṉ. ‘nī ilai ‘eṉavum kēḷēṉ;
iṉṟu āya paḻiyum niṟka, neṭuñ ceruk kaḷattiṉ eṉṉaik
koṉṟāy nī aṉṟō? niṉṉaik kollumēl kuṇaṅkaḷ tīyōṉ.