கம்பராமாயணம் 6967 · யுத்த 11.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய! - ஐயனே! அளியத்தேனுக்கு - இரங்கத்தக்க எனக்கு; அன்பினால் அழிவது செய்தாய் - (உன்) அன்பு காரணமாக (நான்) அழிவதற்குக் காரணமானவற்றைச் செய்தாய்; ஒழிவு அரும் உதவி செய்த - நெஞ்சில் என்றும் நீங்காத அரிய உபகாரம் செய்த; உன்னை நான் ஒழிய வாழேன் - உன்னைப் பிரிந்து நான் உயிர் வாழ மாட்டேன்; எழுபது வெள்ளம் தன்னின் - எழுபது வெள்ளம் சேனையில்; ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி - இங்கு ஒருவரும் குறையாமல் (வெற்றியோடு மீண்டு); செழுநகர் அடையின் அன்றோ - வளமை மிகு அயோத்தியை நான் அடைந்தபோதன்றி; இத்துயர் தீர்வது உண்டோ? -(உன்னை இழந்த) இந்தப் பெருந்துயர் என்னைவிட்டு நீங்கும், நீங்குமோ? (நீங்காது)
"அடையின் அன்றோ” எனும் பாடத்திலும் "அடைந்த போழ்தும்” என்ற பாடம் பொருட்சிறப்புடையது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have done what will be my ruin, sire, out of love; to me, a pitiable man,
- you gave help that can never be forgotten; without you I will not live;
- even if all seventy veḷḷam, with not one man missing, go back
- and reach the rich city — would this grief ever end?'
What the poem says
Irāmaṉ ends his lament. Cukkirīvaṉ acted out of love, but his rash act may destroy Irāmaṉ. After the help Cukkirīvaṉ gave him, Irāmaṉ cannot live without him.
Even if the whole monkey army of seventy veḷḷam came home safe to Ayōttī with no losses, this grief would never leave him. The commentary prefers a variant reading of the last line with this sense.