கம்பராமாயணம் 6971 · யுத்த 11.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெண் நீர் அருவி சோர்கின்ற கண்ணான் - தெளிந்த நீரினையுடைய அருவி போலக் கண்ணீர் பொழிகின்ற கண்ணினையுடையவனான இராமபிரான்; துணைவனை நோக்கி - தன் துணையாய் அமைந்த சுக்கிரீவனைப் பார்த்து; என்றன் உள்ளத்தை ஈர்கின்றது - (நீ என்னைத் திடீரென்று பிரிந்த செயல்) என் உள்ளத்தை இரண்டாகப் பிளந்தது; ஆவி இங்கும் அங்கும் போகின்றது - என் உயிர் (உடலைவிட்டு) (உள்ளும் புறமுமாய்) ஊசலாடத் தொடங்கி அங்கும் இங்குமாக அலைந்து தவித்தது; யாக்கை பெயர்கின்றது இல்லை - என் உடலும் இயக்கத்தைத் தவிர்த்து விட்டது; பின்னை - மேலும்; தேர்கின்ற சிந்தையன்றோ திகைத்தனை? - காலமும் இடமும் தேர்ந்து செயல் புரியும் திறமுள்ளவன் மனத்தையுடையவன் அல்லவா திகைப்பூட்டும் செயல் செய்ய வைத்துவிட்டாய்? என்று சொல்லும் - என்று (மேலும்) சொல்லலானான்.
இராமனைத் தேர்வதற்குக் கூட, ஏழு மராமரங்களை எய்யச் சொல்லித் தேர்ந்த சுக்கிரீவன், இத்தகைய செயல் செய்தது எவ்வாறு என வியந்த பெருமான் தேர்கின்ற சிந்தையன்றோ திகைத்தது என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'It tears at my heart, does it not; this way and that
- my life wavers; my body cannot stir; and then —
- was it not your discerning mind that lost its way?' So saying, he whose eyes
- poured tears like a waterfall of clear water spoke to his companion:
What the poem says
Irāmaṉ, still weeping, speaks to Cukkirīvaṉ. While his friend was gone, Irāmaṉ's heart was torn in two, his life seemed to flutter in and out of his body, and he could not move.
He is amazed that someone as careful as Cukkirīvaṉ could do something so rash. This is the same Cukkirīvaṉ who would not trust Irāmaṉ until he had tested him by having him shoot through seven sal trees. The verse leads into the speech that follows.