கம்பராமாயணம் 6972 · யுத்த 11.36

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கல்லினும் வலிய தோளாய்! நின்னை அக் கருணை இல்லோன்
கொல்லுதல் செய்தான் ஆகின், கொடுமையால் குற்றம் பேணி,
பல்பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி,
வெல்லினும், தோற்றேன் யானே அல்லனோ, விளிந்திலாதேன்?

பொருள் · Meaning in Tamil

கல்லினும் வலிய தோளாய் - மலையினையும் விட வலிமை வாய்ந்த தோள்களையுடைய சுக்கிரீவனே! நின்னை- (என் உயிர்த்துணைவனாகிய) உன்னை; அக்கருணை இல்லோன் - அந்தக் கருணையற்றோன் ஆகிய இராவணன்; கொல்லுதல் செய்வான் ஆகின் -கொன்றிருப்பானேயானால்; விளிந்திலாதேன் - உயிர்துறவாத யான்; கொற்றம் கொடுமையால் பேணி - வெற்றியைக் கொடும் போர் செய்து பெற எண்ணி; பல்பெரும் பகழி மாரி- பற்பல பெரிய அம்பு மழையினால்; வேரொடும் பறிய நூறி - இராவணனை சுற்றத்தோடும் பறித்து அழித்து; வெல்லினும்- வென்றேன் ஆயினும்; தோற்றேன் யானே அல்லனோ? - (அப்போதும்) தோற்றவன் நானே ஆவேன் அன்றோ?

இராவணனை வேரொடு அழித்தாலும் அச்செயல் சுக்கிரீவன் இழப்பினை ஈடு செய்யாது என்று சுக்கிரீவன் பெருமை உணர்த்தப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You whose shoulders are mightier than rock! If that pitiless one
  2. had killed you, then even if, bent on victory in cruel war,
  3. I destroyed him root and all with a rain of many great arrows
  4. and won, would it not be I who had lost — I, who had not died?'

What the poem says

If Irāvaṇaṉ had killed Cukkirīvaṉ, Irāmaṉ says, then even destroying Irāvaṇaṉ and his whole clan with a storm of arrows would not be a victory. Having outlived his friend, he would be the real loser.

The verse shows how highly Irāmaṉ values Cukkirīvaṉ. No victory could make up for losing him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kalliṉum valiya tōḷāy! niṉṉai ak karuṇai illōṉ
kollutal ceytāṉ ākiṉ, koṭumaiyāl koṟṟam pēṇi,
pal perum pakaḻi māri vēroṭum paṟiya nūṟi,
velliṉum, tōṟṟēṉ yāṉē alleṉō, viḷintilātēṉ?