கம்பராமாயணம் 6973 · யுத்த 11.37

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘பெருமையும் வன்மை தானும், பேர் எழில் ஆண்மை தானும்,
ஒருமையின் உணர நோக்கின், பொறையினது ஊற்றம் அன்றே!
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்த்தாய் போல,
இருமையும் கெடுத்தாய் அன்றே? என் நினைந்து என் செய்தாய் நீ?

பொருள் · Meaning in Tamil

ஒருமையின் உணர நோக்கின் - மனத்தை ஒருமுகமாக்கி உணர்ந்து பார்த்தால்; பெருமையும் வண்மை தானும் - பெருமைப் பண்பும் வண்மைக் குணமும்; பேர் எழில் ஆண்மை தானும் - பேரழகுடைய வீரப் பண்பும்; பொறையினது ஊற்றம் அன்றே - பொறுமையெனும் (பெரும்) பண்பிலிருந்து சுரப்பனவேயன்றோ? அருமையும் - உன்னுடைய அருமையினையும்; அடர்ந்து நின்ற பழியையும் -(உன் செயலால்) நெருங்கி வந்த பழியினையும்; அயர்ந்தாய் போல - (நீ மறந்தாய் போலும்! இருமையும் கெடுக்கல் உற்றாய்- இம்மை, மறுமையெனும் இரண்டினையும் கெடுக்க இருந்தாய்; நீ என் நினைந்து என் செய்தாய் - நீ என்ன நினைத்து என்ன செய்துவிட்டாய்?

பொறுமை ஒரு மலை. அப்பண்பிலிருந்து பல பண்புகள் மலையூற்றுகள் போலச் சுரக்கின்றன என்பது கருத்து. இம்மை, மறுமை இரண்டிலும் பழி விளையத்தக்க செயல் இராவணன் மேல் சுக்கிரீவன் பாய்ந்த செயல் என்பது பெருமானின் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Greatness and generosity, and valour joined with great beauty —
  2. if one looks with a steady mind, do they not all spring from patience?
  3. As though you had forgotten your own worth and the blame that pressed close,
  4. you set out to ruin both worlds; what were you thinking, what have you done?'

What the poem says

Irāmaṉ gently scolds his friend. Greatness, generosity, beauty and courage all spring from patience, which is like a mountain from which other virtues flow like springs.

By rushing off alone, Cukkirīvaṉ forgot how precious he is and how much blame the deed could bring. He risked ruin in this life and the next.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘perumaiyum vaṇmaitāṉum, pēr eḻil āṇmaitāṉum,
orumaiyiṉ uṇara nōkkiṉ, poṟaiyiṉatu ūṟṟam aṉṟē!
arumaiyum aṭarntu niṉṟa paḻiyaiyum ayarntāy pōla,
irumaiyum keṭukkaluṟṟāy; eṉ niṉaintu eṉ ceytāy nī?