கம்பராமாயணம் 6974 · யுத்த 11.38

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இந் நிலை விரைவின் எய்தாது, இத்துணை தாழ்த்தி ஆயின்,
நல் நுதல் சீதையால் என்? ஞாலத்தால் பயன் என்? நம்பி!
உன்னை யான் தொடர்வென்; என்னைத் தொடரும் இவ் உலகம்; என்றால்,
பின்னை என், இதனைக் கொண்டு? விளையாடி, பிழைப்ப செய்தாய்! ‘

பொருள் · Meaning in Tamil

இந்நிலை - இந்த நிலையில்; விரைவின் எய்தாது - (நீ விரைந்து இங்கு வாராமல், இத்துணை தாழ்த்தி ஆயின் - இவ்வளவு நேரம் தாமதித்து இருந்தால், உன்னை யான் தொடர்வல் - உனக்குத் தீங்கு விளைந்து இறந்திருப்பாய் எனக் கருதி பின்பற்றி நானும் முடிந்திருப்பேன்; இவ்வுலகம் என்னைத் தொடரும் - என்னைப் பின்பற்றி இவ்வுலகத்தினரும் உயிர் நீத்திருப்பர் என்னும் போது, (பின்பு); நல் நுதல் சீதையால் என்? -நல்ல நெற்றியினையுடைய சீதையால் தான் என்ன (பயன்?) ஞாலத்தால் பயன் என்? - இந்த உலகத்தால் தான் என்ன பயன்? பின்னை இதனைக் கொண்டு என்? - பிறகு, இந்தப் படையெடுப்பாலுந்தான் என்ன பயன் உண்டு? நம்பீ! - சிறந்த ஆண்மகனே! விளையாடிப் பிழைப்ப செய்தாய்? - விளையாட்டுச் செயலால் தவறான செயலைச் செய்துவிட்டாய்.

ஆராயாமல், வருவதுணராமல் செய்யும் செயல்களைப் பெருமான் கண்டிப்பதை இப்பாடலில் காணலாம். நீ இல்லாது போன பின்பு கிடைக்கும் "நன்னுதல் சீதையால் என்?" என்று வினவினான். சந்தர்ப்பச் சூழலில் சுக்கிரீவன் துயரமே பெரிதென்பதால் பெருமானின் இந்த வாசகத்தில் நெஞ்சு நெக்குருகிய நம்பிள்ளை, "அன்றீன்ற கன்றிற்காக முன்பு ஈன்ற கன்றுகளை முட்டி மோதும் தாய்ப்பசுப்போலே, சுக்கிரீவனுக்காகப் பிராட்டியைப் புறக்கணித்தான் என்று வியப்பார். (திருவாய்ஈடு). தண்டகாரணியத்தில், "சீதையாகிய உன்னை இழந்தாலும் இழப்பேன்; ஆனால், என்னையடைந்தாரை என்றும் நான் இழவேன் என்று பெருமான் கூறியதாக முதல் நூலாகிய வான்மீகத்தில் உள்ள கருத்தை, இடமறிந்து இங்குப் பயன்படுத்தியுள்ள கவிஞர் பிரானின் திறம் போற்றத்தக்கது. "விளையாடிப் பிழைப்ப செய்தாய்” ஒப்பு “வளை எயிற்று அரக்கரோடு வரும் விளையாட்டென்றாலும் விளைவன தீமையேயாம்” (கம்ப. 2798) "நான் மரித்தது கண்டு, அரக்கர் மீறி உலகை நலிய, உலகத்தவரும் இறந்து என் பின்னே வருவர்” என்பது இத்தொடர்க்கு ஒரு பழைய உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If, in this pass, you had not come quickly but had delayed this long,
  2. what use Cītai of the fair brow? what use the world? My friend!
  3. I would follow you; and this world would follow me; and then
  4. what use is all this? In sport you have done wrong!'

What the poem says

Irāmaṉ says that if Cukkirīvaṉ had been gone any longer, Irāmaṉ would have died after him, and the world would have followed. Then what would Cītai, or the world, or this whole campaign be worth?

A medieval commentator was moved by this. Irāmaṉ is like a cow that, for the sake of her newborn calf, butts away her older ones: for a new devotee he will set even Cītai aside. Kampaṉ draws here on Vālmīki, where Irāmaṉ says he might give up Cītai, but never those who have taken refuge in him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘in nilai viraiviṉ eytātu, it tuṇai tāḻttiāyiṉ,
nal nutal cītaiyāl eṉ? ñālattāl payaṉ eṉ? nampī!
uṉṉai yāṉ toṭarval; eṉṉait toṭarum iv ulakam; eṉṟāl,
piṉṉai eṉ, itaṉaik koṇṭu? viḷaiyāṭi, piḻaippa ceytāy! ‘