கம்பராமாயணம் 6975 · யுத்த 11.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காட்டிலே - (இவ்வாறு இராமபிரான் கூறக்கேட்ட சுக்கிரீவன்) காட்டின் கண்ணே; கழுகின் வேந்தன் - கழுகரசனான சடாயு; செய்தன காட்டமாட்டேன்- புரிந்தவைபோன்ற வீரச் செயல்களைப் புரிந்து காட்டும் ஆற்றல் பெற்றேனும் அல்லேன்; நாட்டிலே குகனார் செய்த நன்மையை - நாட்டின் கண்ணே குகப் பெருமான் செய்த நன்மைச் செயல்களைச் செய்யவும்; நயக்க மாட்டேன் - விருப்பம் காட்டேன்; கிளி மொழி மாதராளை - கிளியனைய மொழி பேசும் சீதைப்பிராட்டியை; கேட்டிலே நின்று கண்டும் - (இராவணன் கவர்ந்து செல்லும்) தீங்கினை (கிட்நெதை மலை மேல்) நின்று கண்ணாரக் கண்டும்; மீட்டிலேன் - மீட்டுத் தந்தவனும் அல்லேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் - (இத்தீங்கினைப் புரிந்த) இராவணனின் பத்து தலைகளையும் கொண்டு வந்தேனும் அல்லேன்; வெறுங்கை வந்தேன் - வெறுங்கைகளை மட்டும் கொண்டு வந்தேன்.
இராமன் மீது அன்பு கொண்டு உதவி புரிந்தமையால் சடாயுவும் குகனும் முறையே 'பெரிய உடையார் என்றும் குகப்பெருமாள்' என்றும் வைணவ மரபில் பாராட்டிக் கூறப்படுவார் ஆர் விகுதி சேர்த்து மொழிந்தான் குகனார் என்று. இத்தகு பெருமையாலே தான் "குகப்பெருமாள்” எனப் பெயர் பெற்றதுமாம். கைங்கரியம் புரிவதில் இராமபக்தர் களுக்கிடையே நிலவிய சுமுகப் போட்டியை இப்பாடல் அழகுறத் தருகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the forest, the king of vultures did deeds I cannot equal;
- in the settled land, Kukaṉ did good I can never hope to match;
- I have failed — today, though I saw her, the parrot-voiced lady,
- I did not free her; I did not bring the ten heads; I came back empty-handed.'
What the poem says
Cukkirīvaṉ answers modestly. He is no match for Caṭāyu, the vulture king, who gave his life in the forest fighting Irāvaṇaṉ to save Cītai. Nor can he equal Kukaṉ, the boatman chief, who served Irāmaṉ so devotedly.
He saw Cītai being carried off and did not rescue her. Today he has not brought back Irāvaṇaṉ's ten heads. He has come back with empty hands. The commentary enjoys this friendly rivalry among Irāmaṉ's devotees, each eager to serve him best.