கம்பராமாயணம் 6976 · யுத்த 11.40

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

என்பகை தீர்த்து - என்னுடைய பகைவனான வாலியை அழித்து; என் ஆவி - எனது உயிரை; அரசொடும் எனக்குத்தந்த - என் அரசுடனே எனக்குத் தந்தவனான; உன் பகை - (உனக்கு) உன் பகைவனாகிய இராவணனை; உனக்குத் தந்தேன் - (நானே ஒழிக்காமல் நீயே அழிக்கும்படி) உனக்கே விட்டுவைத்தேன்; உயிர் சுமந்து உழலா நின்றேன் - புரிய வேண்டிய உதவியைப் புரியவேண்டியவர்க்குப் புரியாமல் (வீணே) உயிரைச் சுமந்து கொண்டு மனம் வருந்தி வாழ்கின்றேன்; வன் பகை நிற்க - (ஆதலால்) வலிய பகை (அழியாமல் அப்படியே) இருக்க; எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற - எங்களுடைய குரங்குச் செயலுக்குத் தக்க; புன்பகை காட்டும் - அற்பப் பகைச் செயல்களில் (ஈடுபாடு) காட்டுகின்ற; யான் - நானோ; புகழ்ப்பகைக்கு ஒருவன் போலாம் - (உம்முடைய) புகழ்ச் செயல்களுக்கு (ஊறுவிளைக்கப் பிறந்த) ஒருவன் போல்வேன்.

வெல்லுதற்கரிய பகைவனை வென்று தனக்கு உயிரையும் அரசவாழ்வையும் கொடுத்த இராமபிரானுக்குக் கைம்மாறாக அவன் பகை அழிக்காது திரும்பிய தன் செயலை நினைத்து வருந்தும் சுக்கிரீவன் மனநிலையை இப்பாடலில் காண்கிறோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While the mighty foe still stands, I, who show the petty hostility
  2. that suits our monkey nature — am I not like one sworn enemy to your glory?
  3. You ended my foe and gave me back my life together with my kingdom;
  4. your foe I have left to you; I wander on, merely carrying my life.'

What the poem says

Cukkirīvaṉ blames himself. Irāmaṉ killed Cukkirīvaṉ's enemy Vālī and gave him back his life and his kingdom. In return Cukkirīvaṉ should have destroyed Irāmaṉ's enemy, Irāvaṇaṉ. Instead he has come back having done only what suits a monkey: a petty scuffle.

He has left Irāvaṇaṉ for Irāmaṉ to deal with and feels he is merely dragging his life around, useless. He even fears his rash act will tarnish Irāmaṉ's glory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vaṉ pakai niṟka, eṅkaḷ vāṉarat toḻilukku ēṟṟa
puṉ pakaik kāṭṭum yāṉō pukaḻp pakaikku oruvaṉ pōlām?
eṉ pakai tīrttu eṉ āvi aracoṭum eṉakkut tanta
uṉ pakai uṉakkut tantēṉ; uyir cumantu uḻalāniṉṟēṉ. ‘