கம்பராமாயணம் 6979 · யுத்த 11.43

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் நாணி,
மன்னவர் மன்னன் முன்பு, வானர மன்னன் நிற்ப,
அன்னவன் தன்னை நோக்கி, அழகனை நோக்கி, ஆழி
மின் என விளங்கும் பைம்பூண் வீடணன் விளம்பலுற்றான்.

பொருள் · Meaning in Tamil

இன்னன பலவும் பன்னி - இவ்வாறு பல வாசகங்களைச் சொல்லி; இறைஞ்சிய முடியன் நாணி - வணங்கிய தலையினனாய் வெட்கமுற்று; மன்னவர் மன்னன் முன்னர் - அரசர்க்கு அரசனான இராமபிரான் முன்பு; வானர மன்னன் நிற்ப - வானரங்கட்கு அரசனான சுக்கிரீவன் நிற்கும்போது; அன்னவன் தன்னை நோக்கி - அந்தச் சுக்கிரீவனைப் பார்த்து; அழகனை நோக்கி - இராமபிரானைப் பார்த்து; ஆழி மின் என விளங்கும் பைம்பூண் - கடலில் தோன்றிடும் மின்னலைப் போல் ஒளிவிடும் ஆபரணங்களையணிந்த; வீடணன் மொழிவது ஆனான் - வீடணன் மொழியத் தொடங்கினான்.

இட்சுவாகு குலத்திற்கு உலக அரசுகள் எல்லாம் கட்டுப்பட்டது என்னும் மரபு பற்றி "மன்னவர் மன்னன்” என இராமபிரானைச் சுட்டினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having said many such things, his head bowed in shame,
  2. as the king of the monkeys stood before the king of kings,
  3. looking at him, and looking at the beautiful one, he whose
  4. fresh ornaments shone like lightning over the sea, Vīṭaṇaṉ, began to speak.

What the poem says

Cukkirīvaṉ stands before Irāmaṉ with his head bowed. Then Vīṭaṇaṉ, glittering with jewels like lightning over the sea, looks first at Cukkirīvaṉ and then at Irāmaṉ, and begins to speak. In the following verses he praises Cukkirīvaṉ's deed.

Irāmaṉ is called king of kings because, by tradition, all the kings of the earth owed allegiance to the Ikṣvāku line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉaṉa palavum paṉṉi, iṟaiñciya muṭiyaṉ nāṇi,
maṉṉavarmaṉṉaṉ muṉṉar, vāṉara maṉṉaṉ niṟpa,
aṉṉavaṉtaṉṉai nōkki, aḻakaṉai nōkki, āḻi
miṉ eṉa viḷaṅkum paim pūṇ vīṭaṇaṉ viḷampaluṟṟāṉ.