கம்பராமாயணம் 6980 · யுத்த 11.44

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாங்கிய மணிகள் - (வீடணன் சுக்கிரீவனைப் பார்த்து) (நீ) பறித்து வந்த மணிகள்; அன்னான் - அந்த இராவணனுடைய; தலைமிசை மௌலி மேலே - தலையின் மேல் உள்ள மகுடத்தின் மேலே; ஓங்கிய அல்லவோ? - (ஒளிவீசி) உயர்ந்திருந்தன அல்லவோ? இனி அப்பால் உயர்ந்தது ஒன்று உண்டோ? - அவன் தலைமுடி மேல் உயர்ந்திருப்பதிலும் உயர்ந்தது இருக்கிறதா?; தீங்கினன் சிரத்தின் மேலும் - தீமைகள் நிறைந்த அவன் தலைகளை விடவும்; உயிரினும் - உயிரினை விடவும்; சீரிது - சிறப்புடையனவாக கருதியவை அவை; வீங்கிய புகழையெல்லாம் - (அவற்றைப் பறித்து வந்ததன் மூலமாக) அவனுடைய உயர்ந்தோங்கிய புகழ் அனைத்தையும்; வேரொடும் வாங்கி விட்டாய் - வேரொடும் பறித்து வந்து விட்டாய் (அல்லவோ?)

அல்லவோ என்பது ஈரிடத்தும் கூட்டப்பட்டது. இராவணன் உடம்பில் சிறந்தது தலை, அதில் சிறந்தது மகுடம். அதில் சிறந்தது மணி. அதனைப் பறித்து வந்தவன் நீ, சிறந்ததிற் சிறந்ததைப் பறித்து வந்த நீ, சிறந்ததில் சிறந்த செயல் செய்துள்ளனை என்கின்றான் வீடணன். மகுட மணியைப் பறித்தது புகழை வேரொடு பறித்த செயலாகும் எனப் பாராட்டிய திறம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The gems you seized: were they not set high on the crowns upon that one's heads?
  2. Is there anything at all that stands higher than that?
  3. Dearer to that evil one than his heads, dearer than his life were they, ah!
  4. You have torn out by the roots all his swollen fame!"

What the poem says

Cukkirīvaṉ has leapt onto the tower where Irāvaṇaṉ stood, wrestled with him and come back to Irāmaṉ with the gems torn from his ten crowns. Vīṭaṇaṉ praises him for it.

His reasoning climbs step by step: the best part of Irāvaṇaṉ's body is his head, the best thing on the head is the crown, and the best thing on the crown is its jewel. By taking that, Cukkirīvaṉ has taken the best of the best. Snatching those gems is like pulling the demon king's glory out by its roots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṅkiya maṇikaḷ, aṉṉāṉ talaimicai mauli mēlē
ōṅkiya allavō? maṟṟu, iṉi appāl uyarntatu uṇṭō?
tīṅkiṉaṉ cirattiṉ mēlum, uyiriṉum, cīritu ammā!
vīṅkiya pukaḻai ellām vēroṭum vāṅki viṭṭāy!