கம்பராமாயணம் 6981 · யுத்த 11.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாரகம் சுமந்த பாம்பின் - இப்பூமியைச் சுமந்துள்ள பாம்பாகிய ஆதிசேடனுடைய; பணா மணி பறிக்க வேண்டின் - படத்தில் உள்ள நாகமாணிக்கங்களைக் கைப்பற்ற விரும்பினால்; வார்கழல் காலினாலே - (தனது) வீரக்கழல் அணிந்த காலினாலேயே; கல்ல வல்லவனை - கல்லி எடுக்கவல்ல (பேராற்றல் மிக்க) இராவணனுடைய; முன்னா - முன்னாக நின்று; தார் கெழு மௌலி பத்தின் - மாலைகள் நிறைந்த மகுடங்கள் பத்திலிருந்த; தனி மணி வாங்கி வந்த வீரதை - ஒப்பற்ற மணிகளைப் பறித்து வந்த வீரத்தை; விடை வலோற்கும் - இடப வாகனம் ஏறும் சிவபெருமானாலும்; முடியுமோ? - புரிய இயலுமோ? வேறும் உண்டோ? - (இதைவிடவும் சிறந்த வீரச்செயல்) வேறு எதுவும் உண்டோ? (இல்லை)
"யாதன் உருபின் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்" (தொல், சொல், வேற். மயங். 23) ஆதலின் கல்லவல்லவனை விடை வலோற்கும்" எனும் இடங்களில் உள்ள இரண்டன் உருபும், நான்கன் உருபும் பொருட்றெப்புக்கேற்ப, ஆறன் உருபாகவும் மூன்றன் உருபாகவும் உருபுமயக்கப்
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Should he wish to pluck the hood-gems of the serpent that bears the earth,
- he could dig them out with his own war-anklet foot; yet standing before such a one,
- you wrested by force the matchless gems of his ten garlanded crowns:
- could even the Rider of the Bull achieve such valour? Is there any greater deed?"
What the poem says
Vīṭaṇaṉ goes on praising Cukkirīvaṉ. Irāvaṇaṉ is so strong that, if he wanted the jewels on the hoods of Ātisēṭaṉ, the cosmic serpent that holds up the earth, he could gouge them out with his foot. To face such a being and tear the gems from his ten crowns is a feat that not even Civaṉ, who rides the bull, could manage.
The commentary adds a grammatical note: in this verse some case endings stand in for others, which Tamil grammar allows when the meaning requires it.