கம்பராமாயணம் 6983 · யுத்த 11.47

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரிக்குலத்து அரச! - குரங்கினத்தின் தலைவனே! தொடிமணி இமைக்கும் தோளாய்! - தோள்வளையில் பதித்துள்ள மணிகள் ஒளிரும் தோள்களையுடையவனே! வடிமணி வயிரத்து ஒள்வாள் - தேர்ந்த மணிகளும் வயிரமும் பதிக்கப் பெற்ற 'சந்திரகாசம்' என்னும் வாளினை; சிவன் வயின் வாங்கிக் கொண்டான் - சிவபிரானிடமிருந்து பெற்றுக் கொண்டவனான இராவணனுடைய; முடிமணி பறித்திட்டாயோ? - மகுடத்தில் இருந்த மணிகளையா கைப்பற்றினாய் நீ?; இவன் - (இல்லை. இல்லை) இந்த இராமபிரான்; இனி முடிக்கும் வெற்றிக்கு - இனி அடைய இருக்கும் வெற்றி மாளிகைக்கு; அடி மணி இட்டாய்! - அடித்தளத்தில் இடும் மணியை யன்றோ இட்டாய்! சொல் இதின் வேறும் உண்டோ? - புகழ் விளைக்கும் செயல் இதை விடவும் வேறு எதுவும் உண்டோ? (இல்லையென்கு); என்றான் -

சிவனிடம் இராவணன் வரத்தால் பெற்ற வாள் "சந்திரகாசம்". முடிமணியைப் பறித்திட வில்லை; இராமன் வெற்றி மாளிகைக்கு அடித்தள மணியிட்டாய் என ஒன்றைச் சமத்காரமாக மறுத்து இன்னொன்றாகக் கூறுவதால் இது அவநுதியணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O you whose shoulders flash with jewelled armlets! Tell me, is there anything beyond this?
  2. Did you merely pluck the crown-gems of him who received from Civaṉ the bright sword of fine gems and diamond?
  3. No: for the victory this one will now accomplish,
  4. you have laid the foundation gem, have you not, O king of the monkey race!" he said.

What the poem says

Vīṭaṇaṉ ends his praise with a turn of wit. Irāvaṇaṉ got his sword Cantirakācam as a boon from Civaṉ. Vīṭaṇaṉ asks whether Cukkirīvaṉ has only taken that warrior's crown jewels, then answers himself: no, he has laid the foundation stone for the palace of victory that Irāmaṉ is about to build.

Denying the plain fact in order to state a grander one is the figure called apahnuti (denial).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘toṭi maṇi imaikkum tōḷāy! col iṉi vēṟum uṇṭō?
vaṭi maṇi vayira oḷ vāḷ civaṉvayiṉ vāṅkik koṇṭāṉ
muṭi maṇi paṟittiṭṭāyō? ivaṉ iṉi muṭikkum veṉṟikku
aṭi maṇi iṭṭāy aṉṟē? arik kulattu araca! ‘eṉṟāṉ.