கம்பராமாயணம் 6984 · யுத்த 11.48

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு விளம்பத் தக்க
நன்றி அன்று என்றும் அன்று; நால் நிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகில், ஈது ஆர் இயற்றுவார் பரிவின்? ‘என்னா,
‘இன்று இது வென்றி ‘என்று என்று இராமனும் இரங்கிச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

வென்றி அன்று என்றும் - (வீடணன் புகழுரைகளைக் கேட்டு மகிழ்ந்த இராமன் சுக்கிரீவனை நோக்கி) (உன்னுடைய இச்செயல்) வெற்றியுடையது அன்று என்றும்; வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க - வெற்றி வீரர் பால் அமையத்தக்க புகழத்தக்க; நன்றி அன்று என்றும் அன்று - நன்றியுணர்வினைக் காட்டுவதற்குரியது அன்று என்றும் நான் கருதவில்லை; நானிலம் எயிற்றில் கொண்ட - பூமியைத் தன் தந்தத்தின் நுனியில் ஏந்தி வந்த; பன்றி அன்று ஆகின் - வராக மூர்த்தியாகிய திருமாலைத் தவிர; பரிவின் ஈது ஆர் இயற்றுவார்? - இச்செயலை இவ்வளவு விரைவில் யாரே இயற்ற இயலும்; என்னா - என்று; என்று என்று - மீண்டும் மீண்டும்; இரங்கிச் சொன்னான் - (சுக்கிரீவனை முன்பு வைததற்கு) இரங்கிக் கூறினான்.

சுக்கிரீவன் தன் இசைவு பெறாமல், ஆர்வ மிகுதியால் சினங்காவாது பகைவன் பிடியில் அகப்பட இருந்த ஆத்திரச் செய்கை பெருமானை வருத்தியதால் முன்னர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினாலும் மணி முடியைப் பறித்த வெற்றியைப் பெரிதும் பாராட்டினான் என்றும் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I do not say it is no victory, nor that it is no service
  2. worthy to be told of by victorious heroes; but for the Boar
  3. that bore the four-fold earth upon its tusk, who could do this so swiftly?" So saying,
  4. "This today is victory," said Irāmaṉ again and again, moved with tenderness.

What the poem says

Irāmaṉ now speaks. Earlier he had scolded Cukkirīvaṉ for rushing off alone to attack Irāvaṇaṉ without leave and risking capture. Now he says the deed truly is a victory, one that heroes should praise. Only Tirumāl in his Boar form, who lifted the earth on his tusk, could have done such a thing so quickly.

He repeats "this is victory" over and over, sorry for his harsh words: he was angry at the risk Cukkirīvaṉ took, but he rejoices at the outcome.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟi aṉṟu eṉṟum, veṉṟi vīrarkku viḷampattakka
naṉṟi aṉṟu eṉṟum aṉṟu; nāṉilam eyiṟṟil koṇṭa
paṉṟi aṉṟuākiṉ, ītu ār iyaṟṟuvār pariviṉ? ‘eṉṉā,
‘iṉṟuitu veṉṟi ‘eṉṟu eṉṟu irāmaṉum iraṅkic coṉṉāṉ.