கம்பராமாயணம் 6986 · யுத்த 11.50

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கங்குல் வந்து இறுத்த காலை, கைவிளக்கு எடுப்ப, காவல்
வெங் கழலரக்கன் மௌலி விளக்கமே விளக்கம் செய்ய,
செங்கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத் தேக்கிப்
பொங்கிய தோளினானும் இழிந்து போய், இருக்கை புக்கான்.

பொருள் · Meaning in Tamil

கங்குல் வந்து இறுத்த காலை - இரவு வந்து தங்கியபோது; கை விளக்கு எடுப்பது என்ன - கை விளக்கு எடுப்பது போன்று; வெம்கழல் அரக்கன் - கடிய வீரக்கழல்களையணிந்த இராவணனுடைய; மௌலி மிசை மணி விளக்கம் செய்ய - மகுடத்தின் மீது பதித்திருந்த மணிகளே இருள் அகற்றும் விளக்காக ஒளிசெய்ய; செங்கதிர் மைந்தன் செய்த வென்றியை - சிவந்த கதிர்களையுடைய சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன் விளைத்த வெற்றியை; நிறைய தேக்கி - மனத்துக்குள் நிறைத்துக் கொண்டு; இழிந்து போய் - சுவேல மலையிலிருந்து இறங்கிச் சென்று; பொங்கிய தோளினானும் - பூரித்த தோள்கள் உடையவனான இராமனும்; இருக்கை புக்கான் - தன் பாசறை வீட்டையடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When night came and settled in, as though someone held up a hand-lamp,
  2. the gems from the crown of the fierce-anklet guardian demon gave out their light;
  3. and storing up to the full the victory won by the son of the red-rayed Sun,
  4. he of the swelling shoulders too came down and went to his dwelling.

What the poem says

Night has fallen. The jewels Cukkirīvaṉ took from Irāvaṇaṉ's crown shine like a lamp held up in the dark. Irāmaṉ, his shoulders swelling with joy at the victory, climbs down from Mount Cuvēlam and goes back to his camp.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkul vantu iṟutta kālai, kai viḷakku eṭuppa, kāval
veṅ kaḻal arakkaṉ maulimicai maṇi viḷakkam ceyya,
ceṅ katir maintaṉ ceyta veṉṟiyai niṟaiyat tēkkip
poṅkiya tōḷiṉāṉum iḻintu pōy, irukkai pukkāṉ.