கம்பராமாயணம் 6988 · யுத்த 12.1

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மானத்தால் ஊன்றப் பட்ட மருமத்தான், வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும் கோயில் புக்கான்;
பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்; யும் தாரான்.

பொருள் · Meaning in Tamil

மானத்தால் ஊன்றப்பட்ட மருமத்தான் - மானம் என்னும் வேலால் ஊன்றித் தாக்கப்பட்ட மார்பினையுடையவனான இராவணன்; வதனம் எல்லாம் - முகங்கள் பத்தும்; கூனல் தாமரையில் தோன்ற - வாடி வதங்கிய தாமரைகள் போல் (தலைகவிழ்ந்த வண்ணம்) தோற்றம் அளிக்க; வான் தொடும் கோயில் புக்கான் - வான அளவும் தன் அரண்மனைக்குள் நுழைந்தான்; பானத்தான் அல்லன் - (அவ்வாறு நுழைந்த அவன்) (மகிழ்ச்சி தரும்) பானங்களைப் பருகவில்லை; தெய்வப் பாடலான் அல்லன் - தெய்வ இசைப்பாடல்களைக் கேட்டு மகிழவில்லை; ஆடல் தானத்தான் அல்லன் - ஆடல் மகளிர் ஆடும் நாட்டிய சாலைக்கும் செல்ல இல்லை; உரையும் தாரான் - யாரோடும் உரைதரவும் இல்லை; மெல்லென் சயனத்தான் - மெத்தென்ற படுக்கையிற் படுத்துக் கிடப்பதானான். "ஊன்றப்பட்ட" என்னும் வினையால், ஊன்றப்பட்டது மானம் என்னும் வேல் என்பது குறித்தார் அது பாய்ந்துள்ள இடம் நெஞ்சில் என்பார் "மருமத்தான்" என்றார் இந்தப்பாடலில் உள்ள அவலச் சுவை இராவணன் பெற்ற இளிவும் இழவும் பற்றி வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His breast pierced through by the spear of shame, all his faces
  2. looking like drooping lotuses, he entered his sky-touching palace;
  3. he did not drink; he did not listen to divine songs; he did not go
  4. to the dancing hall; he lay on his soft bed; he spoke no word.

What the poem says

A new chapter, the Arraying of the Forces, begins. Irāvaṇaṉ has just lost the gems from his crowns to Cukkirīvaṉ. He goes back into his towering palace with all ten heads hanging like wilted lotuses.

Shame is pictured as a spear driven into his chest. He turns away from wine, music and dance and lies silent on his bed. The pathos of the verse comes from his disgrace and his loss.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉattāl ūṉṟappaṭṭa marumattāṉ, vataṉam ellām
kūṉal tāmaraiyiṉ tōṉṟa, vāṉ toṭum kōyil pukkāṉ;
pāṉattāṉ allaṉ; teyvap pāṭalāṉ allaṉ; āṭal
tāṉattāṉ allaṉ; melleṉ cayaṉattāṉ; uraiyum tārāṉ.