கம்பராமாயணம் 6991 · யுத்த 12.4

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அழை ‘என, எய்தி, பாதம் வணங்கிய அறிஞன்தன்னை,
‘பிழை அற அறிந்த எல்லாம் த்தி ‘என்று அரக்கன் பேச,
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி,
குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான்.

பொருள் · Meaning in Tamil

அழை என எய்தி - '(உள்ளே) அழைத்திடு' என இராவணன் கூற, உள்ளே அடைந்து; பாதம் வணங்கிய - தன் அடிகளில் வணங்கிய; அறிஞன் தன்னை - அறிவு சான்ற (அந்த) ஒற்றனாகிய சார்த்தூலனை (நோக்கி); 'பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி' - 'நீ பிழையின்றி ஒற்றறிந்தவற்றையெல்லாம் (இப்போது) உரைப்பாயாக'; என்று அரக்கன் பேச - என்று இராவணன் உரைக்க; முழை உறுசீயம் அன்னான் - குகையில் அடைந்துள்ள சிங்கம் போன்ற இராவணனுடைய; முகத்தினால் அகத்தை நோக்கி - முகக்குறிப்பினால் (அவன்) மனம் நொந்திருப்பதை யுணர்ந்து; குழையுறு நெஞ்சன் - பணிந்த உள்ளம் உடையவனாய்; பைய வரன்முறை கூறலுற்றான் - மெல்ல, தான் தெரிந்து வந்த முறைப்படி கூறத் தொடங்கினான் (சார்த்தூலன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Call him in," he said; the wise one entered and bowed at his feet;
  2. "Tell me, without error, all that you have learned," said the demon;
  3. reading the heart of the one who was like a lion in its cave from his face,
  4. he of humbled frame began, softly, to tell it in due order.

What the poem says

Irāvaṇaṉ has the spy brought in and orders him to report everything accurately. Cārttūlaṉ can see from the king's face that he is brooding like a lion withdrawn into its cave. He bows humbly and starts, gently, to tell what he has seen, in order.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aḻai ‘eṉa, eyti, pātam vaṇaṅkiya aṟiñaṉtaṉṉai,
‘piḻai aṟa aṟinta ellām uraitti ‘eṉṟu arakkaṉ pēca,
muḻai uṟu cīyam aṉṉāṉ mukattiṉāl akattai nōkki,
kuḻaiyuṟu meyyaṉ, paiya, varaṉmuṟai kūṟaluṟṟāṉ.