கம்பராமாயணம் 6992 · யுத்த 12.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரிய! - வீரம் செறிந்தவனே! மாருதி - அனுமன்; பதின் எழுவெள்ளத்தோடும் - பதினேழு வெள்ளம் சேனையோடும்; மேலை வாயில் - (கோட்டையின்) மேற்குவாசலில்; உழிஞை மேல் வருவது ஆனான் - மதிலைச் சூழ்ந்து முற்றுகையிட்டுள்ளான்; ஆரியன் - இராமபிரான்; சூரியன் மகனை - சூரியன் மகனாகிய சுக்கிரீவனை; அமைந்த வெள்ளம் அத்தனையோடும் - மேற்கூறியவாறு அதே பதினேழு வெள்ளம் சேனையோடும்; தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான் - தன்னை விட்டு நீங்காமல் (தன்னுடனேயே கூட) நிற்குமாறு பணித்துள்ளான்.
இப்பாடல் முதலாக வானர சேனையின் அணிவகுப்பு கூறப் பெறுகிறது. மதிலை வளைத்து முற்றுகையிடுதலை உழிஞைத் திணை ஆதலின் "உழிஞை மேல் வருவது ஆனான்" என்றார் கொடியோனாகிய இராவணனால், அவன் முடி மணி பறித்து வந்த சுக்கிரீவனுக்கு, ஏதாயினும் இடர் வரக்கூடும் என்று, இராமபிரான் தன்னருகேயே வைத்துக் கொண்டு பதினேழு வெள்ளம் சேனையையும் அவனைச் சுற்றி நிற்கப் பணித்தான். இதனால் தன்னை அடைந்தாரைக் காக்கும் அண்ணலின் பேருள்ளமும் பேரருளும் புலனாகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "O valiant one! Coming as assigned, with seventeen veḷḷam,
- Māruti has laid siege to the western gate;
- the Noble One has told the victorious Sun's son, with all the veḷḷam allotted to him,
- to stand by without leaving his side."
What the poem says
The spy reports how the monkey army has been placed around Ilaṅkai. Aṉumaṉ, called Māruti, son of the wind god, is besieging the western gate with seventeen veḷḷam of troops; a veḷḷam is a vast unit of army strength.
Irāmaṉ has kept Cukkirīvaṉ beside him, with another seventeen veḷḷam around him. Cukkirīvaṉ has just humiliated Irāvaṇaṉ and may be a target for revenge, and Irāmaṉ protects those who have come to him. The siege of a fortified wall is the classical theme called uḻiñai.