கம்பராமாயணம் 6993 · யுத்த 12.6

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;
ஒன்று பத்து ஏழு வெள்ளம் கவியொடும் துணைவரோடும்
நின்றனன், நீலன் என்பான், குணதிசை வாயில் நெற்றி.

பொருள் · Meaning in Tamil

அன்றியும் - அல்லாமலும்; அரசன் மைந்தன் - கிட்கிந்தைக்கு இளவரசனாகிய அங்கதன்; பதினேழ் வெள்ளத்து அரியொடும் - பதினேழு வெள்ளம் வானரப்படைகளுடனே; தென்திசை வாயில் - இலங்கையின் தெற்குத்திசை வாயிலில்; செய்யும் செரு எலாம் செய்வது ஆனான் - செய்ய வேண்டிய போரையெல்லாம் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளான்; ஒன்று பத்து ஆறு வெள்ளத்து - (மேலும்) பதினேழு வெள்ளம்; அரியொடும் துணைவரோடும் - குரங்குகளோடும் துணையான நண்பர்களோடும்; நீலன் என்பான் - நீலன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறவன்; குண திசை வாயில் நெற்றி நின்றனன் - கிழக்குத் திசை வாயிலின் முன்பு நின்றுள்ளான்.

ஒன்று பத்து ஆறு - கூட்டுத் தொகையாய்ப் பதினேழைக் குறித்து நின்றது. படைகள் வந்து தண்டு இறங்கியுள்ள இடம் வடக்குக் கோட்டை வாயில் ஆதலின், அதனைத் திசை குறியாமல் கூறியுள்ள திறம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Besides, the king's son, with seventeen veḷḷam of monkeys,
  2. has taken on all the fighting to be done at the southern gate;
  3. with monkeys numbering one and ten and six veḷḷam, and with his comrades,
  4. the one called Nīlaṉ stands at the front of the eastern gate."

What the poem says

The report goes on. Aṅkataṉ, crown prince of Kiṭkintai, holds the southern gate with seventeen veḷḷam of monkeys. Nīlaṉ holds the eastern gate with as many, stated in the verse as "one, ten and six," which add up to seventeen.

The northern gate is not named. That is where the army first landed and pitched camp, and where Irāmaṉ himself is posted.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṉṟiyum, patiṉēḻ veḷḷattu ariyoṭum aracaṉ maintaṉ,
teṉ ticai vāyil ceyyum ceru elām ceyvatāṉāṉ;
oṉṟu pattu āṟu veḷḷattu ariyoṭum tuṇaivarōṭum
niṉṟaṉaṉ, nīlaṉ eṉpāṉ, kuṇa ticai vāyil neṟṟi.