கம்பராமாயணம் 6994 · யுத்த 12.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரண்டு வெள்ளம் - இரண்டு வெள்ளம் சேனையை; இம்பரின் - இவ்வுலகிலே; இயைந்த காயும் கனியும் கொண்டு - உண்ணத்தக்க காய் கனிகளைக் கொண்டு வந்து; வெம்பு வெஞ்சேனைக்கு எல்லாம் - சினந்து போரிடும் கொடிய சேனைகட்கு எல்லாம்; உணவு தந்து உலவவிட்டான் - உணவு அளிக்குமாறு திரிய விட்டிருக்கிறான்; (இராமன்) உம்பியை - உன்னுடைய தம்பியாகிய வீடணனை; வாயில் தோறும் - நான்கு வாயில்களிலும்; நிலை தெரிந்து உணரச் சொன்னான் - (அவ்வப்போதுள்ள) நிலவரங்களை அறிந்து தன்னிடம் அறிவிக்கக் கூறியுள்ளான்; தானும் தம்பியும் - தானும் தன் தம்பியாகிய இலக்குவனும் ஆக; நிற்பது ஆயினன் - (வடக்கு வாயிலில்) நிற்பது ஆனான்; சமைவு ஈது என்றான் - (எதிரியின் அணியில் நிகழ்ந்துள்ள) ஏற்பாடுகள் இது என்று முடித்தான் (சார்த்தூலன்).
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" (திருக். 517) என்பதற்கேற்ப உரியவர்களுக்கு உரிய பணிகள் தரப்பட்டன. வெள்ளம் - ஆகு பெயராய்ச் சேனையைக் குறித்தது. "இயைந்த எல்லாம்" என்பதற்கு "கிடைத்தவையெல்லாம்" எனினும் பொருந்தும். இன்றுள்ள படை அமைப்பிலும் இம்முறைகள் உள்ளமை அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With suitable fruits, green and ripe, gathered in this land, two veḷḷam
- he has sent roaming to bring food to all the fierce, raging army;
- your younger brother he has told to learn the state at every gate and report;
- he himself stands with his younger brother. This is the arrangement," he said.
What the poem says
The spy finishes. Two veḷḷam of monkeys are kept back to gather fruit and feed the fighting army. Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's own younger brother, has been told to go round all four gates and report how each one stands. Irāmaṉ and Ilakkuvaṉ hold the northern gate.
Each person has been given the job he is best fitted for, as the Tirukkuṟaḷ advises a ruler to do. The commentary notes that modern armies are organised along the same lines.