கம்பராமாயணம் 6995 · யுத்த 12.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சார்த்தூலன் இதனைச் சொல்ல - சார்த்தூலன் இவ்வாறு கூறி முடித்தவுடன்; தழல் சொரி தறு கணானும் - தீப்பொறி சிதறும் கண்கள் கொண்ட இராவணனும்; பார்த்து - (கனல் சொரி கண்ணினனாய்) பார்த்து; எயிறு தின்னா - பற்களைக் கடித்த வண்ணம்; அவர் - அப்பகைவரின்; உடல் பொறையின் நின்றும் - உடல் சுமையிலிருந்தும்; தேர்த்து ஊறு குருதி தன்னால் - தேர் சென்ற சுவடு வழியாய் ஓடும் குருதி வெள்ளத்தால்; போர்த்தூளி நாளை துடைப்பென் - போரால் எழும் புழுதியை நாளை போக்குவேன்; ஊழி வடவை பொங்கப்படுவது - ஊழிக்காலத்தே வடவா முகாக்கினி பொங்கியெழுகையில் உலகோர் அழிவதைப் போன்ற அழிவினை; படுமா பார்த்தி - போர்க்களத்தில் நாளை (நீ) பார்ப்பாயே; என்றனன் - என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Cārttūlaṉ had said this, he of fierce, fire-shedding eyes
- glared and said, "You will see them perish as when the doomsday mare-fire surges;
- tomorrow I will wipe away the dust of battle with the blood
- that wells from the heaps of their bodies along the chariot tracks," grinding his teeth.
What the poem says
Hearing the report, Irāvaṇaṉ glares with fiery eyes and grinds his teeth. He boasts that tomorrow his enemies will be destroyed the way the world is at the end of an age, when the mare-headed fire under the ocean flares up. So much blood will flow from their bodies along the chariot ruts that it will settle all the dust of battle.