கம்பராமாயணம் 6996 · யுத்த 12.9

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மா அணை நீலக் குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன,
தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,
ஏ அணை வரிவில் காமன் கணைபட எரியா நின்ற
பூ அணை ஆற, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்

பொருள் · Meaning in Tamil

மா அணை நீலக்குன்றத்து - (இவ்வாறு சார்த்தூலனிடம் கூறிய இராவணன்) பெருமை பொருந்திய நீலமலையில்; இளவெயில் ஊர்ந்தது என்ன - இள வெயில் எழுந்தால் போன்று; தூ அணை குருதிச் செக்கர் சுவடு உறப் பொலிந்த தோளான் - தசையோடு பொருந்திய குருதிக்கறை பதிந்த சுவடுகள் அழுந்திய அழகிய தோள்களையுடைய இராவணன்; ஏ அணை வரிவில் காமன் கணைபட - அம்பு எய்யும் தொழிலையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லோன் ஆகிய மன்மதனின் கணைகள் பட்டதனால்; எரியா நின்ற - வெப்பம் விளைவித்த; பூ அணை மாறி - மலர் மஞ்சத்திலிருந்து மாறி; வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் - வேறு ஒரு மணிகள் புனையப் பெற்ற அறையைச் சென்றடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like young sunlight spreading over a great blue mountain,
  2. he whose shoulders shone with the red marks of blood pressed into them,
  3. burning as the arrows of Kāmaṉ, of the banded bow fitted with shafts, struck it,
  4. left that flower-bed and went into another chamber set with gems.

What the poem says

Irāvaṇaṉ's dark body still carries red bloodstains from his struggle with Cukkirīvaṉ, like morning light on a blue mountain. His bed of flowers has grown hot from the arrows of Kāmaṉ, the love god, because he burns with desire for Cītai. He gets up from it and moves to another jewelled hall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā aṇai nīlak kuṉṟattu iḷa veyil vaḷarntatu eṉṉa,
tū aṇai kurutic cekkarc cuvaṭu uṟap polinta tōḷāṉ,
ē aṇai vari vil kāmaṉ kaṇai paṭa eriyāniṉṟa
pū aṇai māṟi, vēṟu ōr puṉai maṇi irukkai pukkāṉ