கம்பராமாயணம் 6998 · யுத்த 12.11

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அளந்து அறிவரியர் ஆய அமைச்சரை அடங்க நோக்கி,
‘வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள் தோறும் வந்து;
விளைந்தது பெரும்போர் என்று விட்டது; விடாது, நம்மை
உளைந்தனர்; என்ன எண்ணி? என் செயற்கு உரிய? ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சரை - அளந்து அறிவினைக் கணிக்க இயலாத அமைச்சர் கூட்டத்தை; அடங்க நோக்கி - முழுவதும் (அளந்து) நோக்கி; வாயில்கள் தோறும் வந்து குரங்கின் சேனை வளைந்தது - கோட்டை வாயில்கள் தோறும் வானர சேனை வந்து வளைந்து நிற்கிறது; பெரும்போர் விளைந்தது என்ன விட்டது - பெரிய யுத்தம் விளைந்தது என்னுமாறு (நிகழ்ந்து) விட்டது; நம்மை விடாது - இனி போர் நம்மை விடாது; உளைந்தனம் - (நாம்) மனம் நொந்துள்ளோம்; என்ன எண்ணி - (இனி) யாம் யாது நினைந்து; என் செயற்கு உரிய? என்றான் - என்ன செய்ய உள்ளோம் என்றான்.

அரியர் என்பதன் விகுதியைப் பிரித்துக்கூட்டி, அளத்தற்கரிய அறிவினையுடைய அறிஞர்கள் ஆகிய அமைச்சர்கள் எனப் பொருள் கொள்க. மிகப் பலராகிய அமைச்சர்கள், சூழ்நிலையின் நெருக்கடி காரணமாக, மந்திராலோசனைக்கு அழைக்கப் பட்டிருந்தனர் என்பார் "அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சர்" என்றும் கொள்ளலாம். 'உளைந்தனம்' என்னும் சொல்லில் இராவணன் சோகம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking over all his ministers, whose wisdom none can measure,
  2. he said, "The monkey army has come and closed round every gate;
  3. it is as though a great war has already broken out; it will not let us go;
  4. we are troubled. What shall we resolve, and what is fit for us to do?"

What the poem says

Irāvaṇaṉ puts the problem to his council: the monkey army has surrounded every gate, war has in effect already begun, and there is no escaping it.

The phrase about the ministers can be read two ways: their wisdom is beyond measure, or they are too many to count, since in this crisis everyone has been called in. The word he uses for "we are troubled" lets his distress show.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷantu aṟivu ariyar āya amaiccarai aṭaṅka nōkki,
‘vaḷaintatu kuraṅkiṉ cēṉai, vāyilkaḷtōṟum vantu;
viḷaintatu perum pōr eṉṟu viṭṭatu; viṭātu, nammai
uḷaintaṉam; eṉṉa eṇṇi? eṉ ceyaṟku uriya? ‘eṉṟāṉ.