கம்பராமாயணம் 6999 · யுத்த 12.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் - (நிகும்பன் இராவணனை நோக்கி) எழுபது வெள்ளம் எனக்கணக்கிடப்பட்ட குரங்குத் தொகுதிகள்; எயிலை முற்றும் தழுவின என்று - (நம் இலங்கையின்) மதில்களை முழுவதும் சுற்றி வளைத்தன என்று; செய்யத் தக்கது சமைதி போலாம் - (இனி) செய்யத்தக்கது என்னவென்று மனம் அழிந்து உள்ளாய் போலும்! உழிஞையை - நமது பகைவர் சூடியுள்ள மதில் முற்றுகைக்குரிய உழிஞைப்பூவை; துடைக்க - அடியோடு அழித்தற்கு; அழுவ நீர் வேலை அன்னது - பரந்த நீர் நிறைந்த கடல் போன்றதாகிய; உன் ஊர் - உன் இலங்கைப் படை; நொச்சி உச்சியில் கொண்டது - மதில் காத்தற்குரிய நொச்சிப் பூவை உச்சியில் கொண்டதாய்; ஆயிரம் வெள்ளம் அன்றே? - (உள்ளதன் தொகை) ஆயிர வெள்ளம் அளவினது அன்றோ?
வெள்ளம் - ஐம்பத்தேழு தானங்களையுடைய பேரெண் என்பர் உழிஞை - மதிலை முற்றுகையிடுவார் சூடும்பூ; நொச்சி மதில் காப்பார் சூடும் பூ. "எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை" என்பது பன்னிரு படலம். "உன் ஊர்" என்பது ஆகுபெயராய் ஊர்ப்படையைக் குறித்து நின்றது. பகைவர் உழிஞைப் படையை அழிக்க இலங்கை நகரமே தன் உச்சியில் நொச்சியைச் சூடிக்கொண்டது என நயமுற மொழிந்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Because the monkey host of seventy veḷḷam has wholly
- encircled the walls, you seem at a loss for what is to be done;
- but is it not a thousand veḷḷam, like the wide ocean of waters,
- your city, that wears the nocci on its crown to wipe out the uḻiñai?"
What the poem says
Nikumpaṉ, one of Irāvaṇaṉ's warriors, answers scornfully. Why should the king worry about seventy veḷḷam of monkeys when Ilaṅkai's own army, vast as the sea, numbers a thousand veḷḷam?
In classical Tamil war poetry, besiegers wear uḻiñai flowers and defenders wear nocci flowers. Nikumpaṉ pictures the whole city wearing the defenders' flower to wipe out the attackers. "Your city" stands for the city's army. A veḷḷam is an enormous number, said to run to fifty-seven places.