கம்பராமாயணம் 7000 · யுத்த 12.13

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழு, மழு, தண்டு, வேல், வாள் - கணைய மரமும், எரியீட்டியும், கதையும், வேலும், வாளும்; இலை நெடும் சூலம் ஆதி - இலைத்தொழில் பொருந்திய நீண்ட சூலமும் முதலிய; முழு முதற் படைகள் ஏந்தி - சிறந்த தலையான போர்க்கருவிகளை ஏந்தி; இராக்கதர் முனைந்தபோது - அரக்கர்கள் (போர்க்களத்தில்) போரிட முயலும் போது; சுரர்கள் - தேவர்கள்; தம் படைகள் முன்னிட்டு - தம்முடைய ஆயுதங்களை அரக்கர் முன் போட்டுவிட்டு; தொழுது ஓடுவார் என்றால் - தொழுதவாறு ஓடுவார்கள் என்றால்; குரங்கு வந்து - குரங்குகள் வந்து; வெறும் கையால் - (போர்க்கருவிகள் பிடிக்கத் தெரியாத) வெறுங்கைகளால்; கொள்ளும் வென்றி விழுமிது! - (நம்மிடம்) அடையும் வெற்றி மிகவும் சிறந்ததுதான்!

விழுமிது - குறிப்புப் பொருள். குரங்குகளின் கரங்கள் மரம் தாவுதற்கும், காய் கனியுண்பதற்கும் ஆனவை; போரிடற்கோ கொலைக்கருவிகள் தாங்குவதற்கோ ஆகாதவை என்று, இகழ்ந்து "வெறும் கை" என்றான். படைக்கலங்களே வெற்றி தருவன என்ற நம்பிக்கையில் திளைப்பது அரக்கர் இனம். குரங்குகள் படைக்கலம் ஏதும் இல்லாதவை. அறத்தின் நாயகன் சார்பினவாகிய பாடலில் வரும் இச்செய்தி 'வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதூஉம் கோடாது எனின்' (குறள் 540) என்ற குறட்கருத்துடன் இணைத்து நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Bar, axe, mace, spear, sword and long leaf-bladed trident: these
  2. foremost weapons of all the demons bear when they press into battle,
  3. and the gods fold their hands, throw down their own weapons before them and run; that being so,
  4. splendid indeed will be the victory monkeys come and win with bare hands!"

What the poem says

Nikumpaṉ goes on mocking. Even the gods drop their weapons and flee, hands folded, when the demons attack with their arsenal. How grand a victory, then, will monkeys win with nothing but bare hands!

"Splendid" is sarcasm: monkeys' hands are for swinging through trees and eating fruit, not for holding weapons. The irony runs against him, though. The demons trust in weapons, while the side of righteousness fights unarmed, and as a well-known Tirukkuṟaḷ couplet says, it is not the spear that brings victory but a king's just rule.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eḻu, maḻu, taṇṭu, vēl, vāḷ, ilai neṭuñ cūlam, eṉṟu im
muḻu mutaṟ paṭaikaḷ ēnti, irākkatar muṉainta pōtu,
toḻutu tam paṭaikaḷ muṉ iṭṭu, ōṭuvār curarkaḷ eṉṟāl,
viḻumitu, kuraṅku vantu veṟuṅ kaiyāl koḷḷum veṉṟi.