கம்பராமாயணம் 70 · பால 2.50

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பழநறை பழையர்தம் மனையன - பழமையான கள், கள் விற்பவர்களின் வீடுகளில் உள்ளது; நுகரும் உழவர்தம் மனையன - அந்தக் கள்ளைப் பருகும் உழவர்கள் வீடுகளிலே; உழுதொழில் - உழவுத் தொழிலுக்கான கருவிகள் உள்ளன; புரியும் மழவர்தம் மனையன மணஒலி - மணம் புரியும் இளைஞர் இல்லங்களில் மணவாத்தியங்கள் ஒலிக்கின்றன; இசையின் கிழவர் தம் மனையன - இசைவல்ல பாணர் வீடுகளில்; கிளை பயில் வளை யாழ் - கிளை என்ற நரம்பினையுடைய வளைந்த யாழ்கள் உள்ளன.

கள் விற்போர் மனைகளில் பழங்கள் உள்ளன. அதனைப் பருகும் உழவர் மனைகளிலே உழவுக்குரிய கருவிகள் உள்ளன. மணம்புரியும் இளைஞர் இல்லங்களிலே மணமுழவு ஒலிக்கும். இசைவல்ல பாணர்களின் மனைகளிலே பலவகையான யாழ்கள் உள்ளன. அவரவர்க்குரிய தொழில்களைப் புரிந்து நலமாக வாழ்கின்றனர், அந்த நாட்டு மக்கள் என அறிகிறோம். பழையர்: கள் விற்போர் இசையின் கிழவர்: பாணர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the homes of the toddy sellers is old toddy; of those who drink it,
  2. in the homes of the farmers, are the tools of ploughing; of those who wed,
  3. in the homes of the young men, the sound of wedding music; and of music
  4. in the homes of the masters, curved lutes strung with the kiḷai string.

What the poem says

Each household in Kōcalam holds the things of its own trade, and everyone lives well by their own calling. Toddy sellers keep aged toddy in their homes. The farmers who drink it keep their ploughing tools. Young men about to marry have wedding drums sounding in their houses, and bards who are masters of music keep curved lutes strung with the kiḷai string. The verse links each line to the next, since the drinkers of the toddy in the first line are the farmers of the second.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḻaiyartam maṉaiyaṉa paḻa naṟai nukarum
uḻavartam maṉaiyaṉa uḻu toḻil puriyum
maḻavartam maṉaiyaṉa maṇaoli icaiyiṉ
kiḻavartam maṉaiyaṉa kiḷai payil vaḷai yāḻ.