கம்பராமாயணம் 7003 · யுத்த 12.16

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராமன் வாளி - (ஆகையால்) இராமனது அம்புகள்; தொடைக்கலத்துத் தோன்றுதல் முன்னம் - நாணிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே; தோன்றா இடைக்கு - கட்புலனாகாத (தன்) இடைக்கு; அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை - வருத்தம் தருகின்ற தனங்களையுடைய சீதையை; ஈந்து - இராமனுக்குத் தந்துவிட்டு; படைக்கலம் உடைய நாம் - போர்க்கருவிகள் பலவற்றை உடைய அரக்கராகிய நாம்; அப்படை இலாப் படையை - அத்தகைய ஆயுதங்கள் எவையும் அற்ற அவ்வானர்ப்படையை; ஈண்ட அடைக்கலம் புகுவது அல்லால் - விரைவாகச் சரணம் அடைவதைத் தவிர; இனிப் புகும் அரணும் உண்டோ? - இனித் (தீங்குவாராமல்) புகுதற்குரிய பாதுகாப்பு வேறு ஏதும் உண்டோ? (இல்லை).

தொடைக்கலம் - நாண் ஆகிய கருவி. அறத்தின் பக்கமே வெற்றி நிற்கும் ஆதலால், பாவத்தின் பக்கம் உள்ள நாம் எத்தனை படைக்கருவிகள் வைத்திருந்தும் பயனில்லை. வெறுங்கைப் படை வெல்லப்போகிறது; வீணாக ஆயுதம் சுமந்த நாம் தோற்கப் போவது உறுதி. சரணம் அடைவதே பாதுகாப்பாகும். வருவதுணரும் ஞானியாகிய மாலியவான் மொழிந்தான். சரணாகதி நெறியை இயலும் இடங்களில் எல்லாம் சாற்றும் காவியமாதலின், "அடைக்கலம் புகுவது அல்லால் வேறு இனிப் புகும் அரணும் உண்டோ?" என வேற்றுப்பொருள் அணியாகக் கொள்ளுமாறும் இறுதியடியை அமைந்துள்ள திறம் காண்க. "வேல் அன்று வென்றி தருவது" (திருக். 540) என்பதை இப்பாடற்கருத்தோடு ஒப்பிட்டு மகிழ்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Before Irāmaṉ's arrows appear, set to the bowstring,
  2. give back her whose breasts weigh on a waist that cannot be seen;
  3. we who have weapons must quickly seek refuge with that weaponless army;
  4. other than that, is there any fortress left for us to enter?"

What the poem says

Māliyavāṉ, who can see what is coming, gives his advice: return Cītai before Irāmaṉ's arrows leave the bowstring, and surrender. However many weapons the demons carry, victory stands with righteousness, and the unarmed army will win.

The last line also works as a general truth: there is no shelter except surrender to the Lord. The epic stresses this idea of saranagati, taking refuge, wherever it can. The commentary again recalls the Tirukkuṟaḷ: it is not the spear that brings victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘toṭaik kalantu irāmaṉ vāḷi tōṉṟutal muṉṉam, tōṉṟā
iṭaikku alamarutal ceyyum mulaiyiṉāḷtaṉṉai īntu,
paṭaikkalam uṭaiya nām, ap paṭai ilāp paṭaiyai, īṇṭa
aṭaikkalam pukuvatu allāl, iṉip pukum araṇum uṇṭō?