கம்பராமாயணம் 7005 · யுத்த 12.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காட்டிய - (பிறகு இராவணன் படைத்தலைவன் பிரகத்தனை நோக்கி) (போரில் வீரம்) காட்டிய; கால கேயர் - காலகேயரின்; கொழு நிணக்கற்றை கால - கொழுமையுடைய நிணத்தொகுதி வெளிப்பட்டுச் சொரியுமாறு; தீட்டிய படைக்கை வீர! - கூர்மை மிக்க ஆயுதங்களைக் கரங்களில் ஏந்திய வீரனே! சேனையின் தலைவ! - அரக்கர் படையின் தலைவனே! தெள்ளி ஈட்டிய - தெளிந்து திரட்டிய; அரக்கர் தானை - இராக்கதப் படையில்; இருநூறு வெள்ளம் கொண்டு - இருநூறு வெள்ளம் சேனையை (உன் பொறுப்பில் எடுத்துக்) கொண்டு; நின் பெருங்கிளைகளோடும் - தலைவர் முதலிய படைச்சுற்றத்தாரோடும்; (கோட்டையின்) கீழ்த்திசை வாயில் நிற்றி - கிழக்குத் திக்கு வாயிலில் நிற்பாயாக (என்று ஆணையிட்டான்).
காலகேயர் இராவணன் பகைவர். 6952ஆம் பாடலில் கீழ்த்திசை வாயிலில் இராமசேனை நீலன் தலைமையில் 17 வெள்ளத்தோடும் நின்றது குறிக்கப்பட்டது. அதற்கெதிராகப் பிரகத்தன் தலைமையில் இராவணன் அரக்கர் படை இருநூறு வெள்ளத்தை அங்கு அனுப்ப ஆணையிட்டான். நாகலோகத்தில் நின்றும் போர்க்காட்டியவர் என்பது பழைய உரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who made the rich fat of the Kālakēyar, who stood and fought, pour out,
- with sharpened weapons in your hands, chief of the army of heroes! Taking
- two hundred veḷḷam of the demon host, carefully chosen and gathered,
- stand at the eastern gate together with your great kinsmen."
What the poem says
Irāvaṇaṉ now posts his own army. He speaks first to his commander Pirakattaṉ, who once slaughtered the Kālakēyar, enemies of Irāvaṇaṉ, so that their fat spilled out.
Pirakattaṉ is to hold the eastern gate with two hundred veḷḷam of picked demon troops and his own warrior kinsmen, facing Nīlaṉ's seventeen veḷḷam of monkeys there.