கம்பராமாயணம் 7006 · யுத்த 12.19

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரக் காளையே! போய்,
மால் ஒன்றும் மனத்து வீர மாபெரும் பக்கனோடுங்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி.

பொருள் · Meaning in Tamil

காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதர! - இயமனின் செருக்கினை ஒழித்த மகோதரனே! காலையே போய் - காலத்தோடே சென்று; மால் ஒன்றும் மனத்து - யுத்தப் பித்துக் கொண்ட மனமுடைய; வீரன்! மாபெரும் பக்கனோடும் - வீரனாகிய மாபெரும் பக்கனோடும்; வெள்ளம் நால் ஐம்பதோடும் சென்று - இருநூறு வெள்ளம் சேனையோடும் போய்; நமன் திசை வாயில் நண்ணி - நமன் வாழும் திசையாகிய தெற்குத் திசையையடைந்து; கூலம் கொள் குரங்கையெல்லாம் - வால் கொண்ட குரங்குகள் அனைத்தையும்; கொல்லுதி - கொன்று தீர்ப்பாயாக.

எல்லா உயிரையும் கொல்லவல்ல செருக்கையும் அழித்தவனாதலின் "காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரன்" எனப்பட்டான். யுத்தப் பித்துக் கொண்டவன் மாபெரும் பக்கன். மால் - பித்து, வெறி. மகா பாரிசுவன் எனும் வடசொல்லை, மாபெரும் பக்கன் எனத் தமிழ்ப்படுத்தினார் ஆசிரியர். காலை - காலம். "காலையே போய்" இந்தக் காலை நேரத்திலேயே போய் எனினுமாம். மகோதரன் தென்திசை வாயிலில் உள்ள (6952) அங்கதனுக்கெதிராக அனுப்பப்படுகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Makōtaraṉ, who quelled the pride of Kālaṉ! Going in good time,
  2. with the hero Māperumpakkaṉ, whose mind is set on the frenzy of war,
  3. kill all the tailed monkeys, going with veḷḷam
  4. four times fifty, and taking your stand at the gate on Namaṉ's side."

What the poem says

Makōtaraṉ, who once humbled Kālaṉ, the god of death, is sent to the southern gate, Namaṉ's (Yama's) quarter. He will face Aṅkataṉ there with two hundred veḷḷam and the war-mad hero Māperumpakkaṉ. His orders are to kill every monkey.

Māperumpakkaṉ is the poet's Tamil rendering of the Sanskrit name Mahāpārśva. "In good time" may also mean "this very morning."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kālaṉtaṉ kaḷipput tīrtta makōtara! kālaiyē pōy,
māl oṉṟum maṉattu vīraṉ māperumpakkaṉōṭum
kūlam koḷ kuraṅkai ellām kolluti veḷḷam āṉa
nāl aimpatōṭum ceṉṟu namaṉ ticai vāyil naṇṇi.