கம்பராமாயணம் 7007 · யுத்த 12.20

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஏற்றம் என், சொல்லி? வல்வில் இந்திரன் பகைஞ! அந்நாள்
காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது அன்றே?
நூற்று இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற,
மேல் திசை வாயில் சேர்தி விடிவதன் முன்னம் வீர!

பொருள் · Meaning in Tamil

இந்திரன் பகைஞ! - இந்திரனின் பகைவனாகிய இந்திர சித்தே! என்பால் ஏற்றம் சொல்லின் என்? - (உன்) பெருமையை என்னிடம் சொல்வதால் என்ன பயன்? (எனக்கேதெரியும்) அந்நாள் - இலங்கை எரிந்த அந்த நாளில்; காற்றினுக்கு அரசன் மைந்தன் - காற்றரசனாகிய வாயுவின் மகனான அனுமனுடைய; கடுமை நீ கண்டது அன்றோ? - கடிய ஆற்றலை நீ (கண்ணாரக்) கண்டவன் அன்றோ? வீர! - வீரனே! நூற்றிரண்டு ஆய வெள்ளம் - இருநூறு வெள்ளம் சேனையை; நுன் பெரும் படைஞர் சுற்ற - உனது பெரும் படையினர் சூழ்ந்து நிற்க; மேல் திசை வாயில் - (இலங்கைக் கோட்டையின்) மேற்குத் திக்கு வாயிலுக்கு; விடிவதன் முன்னம் சேர்தி - விடிவதற்குள் சென்றடைவாயாக!

அனுமன் பதினேழு வெள்ளம் சேனையோடு மேற்கு வாயிலுக்கு அனுப்பப்பட்டான். அனுமன் வலிமை இலங்கை எரியுண்ட போதும், அசோக வனத்தை அழித்த போதும் அறியப்பட்டுள்ளதாதலின், அவனை எதிர்த்து நிற்க, இந்திரனை வென்ற தன் மகன் இந்திரசித்தையே அனுப்புகின்றான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Why speak to me of your greatness, foe of Intiraṉ? That day,
  2. did you not see for yourself the fierceness of the son of the king of winds?
  3. With twice a hundred veḷḷam, your great warriors all with you,
  4. reach the western gate before the dawn, O hero!"

What the poem says

Irāvaṇaṉ sends his son Intiracittu, who once defeated Intiraṉ, king of the gods, to the western gate with two hundred veḷḷam. Aṉumaṉ, son of the wind god, holds that gate.

He needs no reminding of his son's valour, he says. But Intiracittu has seen for himself what Aṉumaṉ can do: he wrecked the Acōka grove and burned the city. Only the best of the demons can stand against him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēṟṟam eṉ, colliṉ eṉpāl? intiraṉpakaiña! an nāḷ
kāṟṟiṉukku aracaṉ maintaṉ kaṭumai nī kaṇṭatu aṉṟō?
nūṟṟu iraṇṭu āya veḷḷa nuṉ perum paṭaiñar tappa,
mēl ticai vāyil cērti viṭivataṉ muṉṉam vīra!