கம்பராமாயணம் 7008 · யுத்த 12.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விருபாக்க! - விருபாக்கனே! இந்நெடுங்காலம் எல்லாம் - இந்த (நீண்ட) நெடுங்காலம் முழுவதும்; இமையவர்க்கு இறுதிகண்டாய் - தேவர்களோடு போரிட்டு அவர்கள், சாவையே கண்டுவந்தவன் நீ; புல் நெடுங்குரங்கின் சேரல் புல்லிது - (இன்று இந்தப்) புல்லிய ஆனால் நெடும் தொகையினையுடைய குரங்குகளின் மேல் நீ (போர் புரியப்) போவது இழிந்தது; புகழும் அன்று - உனக்கு அது புகழையும் தராது; (ஆதலால்) அந்நெடும் மூலத்தானை அதனொடும் - அந்தப் பெருமைக்குரிய மூலபலத்துடனும்; அமைச்சரோடும் - மந்திரிமாருடனும்; தொல் நெடும் நகரிகாக்க - பழமையும் பெருமையும் உடைய இந்த இலங்கை மாநகரைக் காப்பாயாக! என்று சொன்னான் - என்று கூறினான்.
விருபாக்கன் - இராவணன் படைத்தலைவன் ஒருவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "All this long age you have been the end of the gods;
- to go against these mean, endless monkeys is petty, and no glory either;
- so with that great core army and with the ministers,
- guard this ancient, great city, Virupākkaṉ!" he said.
What the poem says
Virupākkaṉ, another of Irāvaṇaṉ's commanders, has spent ages killing gods. Irāvaṇaṉ says fighting a rabble of monkeys, however many there are, is beneath him and would win him no glory. He is to stay inside and guard the ancient city with the reserve army and the ministers.