கம்பராமாயணம் 7010 · யுத்த 12.23

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கலங்கிய கங்குல் ஆகி - (எல்லோரும்) கலங்குவதற்குக் காரணமாய் கங்குல் எனும் பெயர் கொண்டு; நீங்கிய கற்பம் - அகன்ற ஊழிக்காலமானது; நலம் கிளர் தேவர்க்கேயோ? - (தீயோராம் அரக்கர் அழிந்து நல்லோர் வாழும் நலம் காண அவாவியுள்ள தேவர்க்கு மட்டும்தானா? நான் மறை முனிவர்க்கேயோ - நான்கு வேதங்களிலும் வல்ல முனிவர்க்கு மட்டுந்தானா? பொலம் கெழு சீதைக்கேயோ? - பொலிவு மிக்க சீதைக்கு மட்டும் தானா? இலங்கையர் வேந்தற்கேயோ? - இலங்கை மக்களின் வேந்தனாகிய இராவணனுக்கு மட்டும் தானா? எல்லார்க்கும் இன்பம் செய்தது - (தனித்தனியாக அல்லாமல்) இவர்கள் எல்லோர்க்கும் ஒரு சேர இன்பம் விளைத்தது.

இராவணனின் துன்பம் நீங்கிக் கதிமோட்சம் பிறந்தது என்று தேவர் முனிவர்க்கும், போர் தொடங்கித் தனக்கு விடுதலை வரும் எனப் பிராட்டிக்கும், அரக்கனை ஒழிக்க விடியலை விரும்பி நின்றதனால் இராமனுக்கும், போரில் இராமனை வென்று சீதையை யடைவேன் என்று கருதும் இராவணனுக்கும் அந்த இரவு அவர் நினைவால் இன்பம் விளைத்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The night that had been an aeon of trouble passed; was it to
  2. the gods glowing with goodness, or to the sages of the four Vedas,
  3. or to golden Cītai, or to Irāmaṉ of fighting strength,
  4. or to the king of Ilaṅkai's people? It brought joy to them all.

What the poem says

The night ends. It felt as long as an aeon and troubled everyone, and its passing pleases every party, each for a different reason.

The gods and sages hope the war will free them from Irāvaṇaṉ. Cītai hopes it will bring her release. Irāmaṉ has waited all night for the dawn so he can destroy the demon. Irāvaṇaṉ is glad too, because he imagines he will defeat Irāmaṉ and win Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalaṅkiya kaṅkul āki nīṅkiya kaṟpam, kāṇum
nalam kiḷar tēvarkkēyō, nāṉmaṟai muṉivarkkēyō,
polam keḻu cītaikkēyō, poru vali irāmaṟkēyō,
ilaṅkaiyar vēntaṟkēyō, ellārkkum ceytatu iṉpam.