கம்பராமாயணம் 7011 · யுத்த 12.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அளித்தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் - கருணையெனும் பண்பு இன்றி வலிமையெனும் பண்பு மட்டும் அமைந்தவன் ஆகிய இராவணனுடைய; கொடுமையஞ்சி - கொடுங்கோன்மைக்குப் பயந்து; வெளிப்படல் அரிது என்று - நாம் வெளிப்பட்டு உலவுதற்கு இயலாது என்று; உன்னி - நினைத்து (மறைந்து வாழ்ந்து); வேதனை யுழக்கும் வேலை - துன்பத்தால் துவளுங்காலத்து; களித்தவன் களிப்பு நீக்கி - செருக்குற்ற அவனின் செருக்கினை அழித்து; காப்பவர் தம்மைக் கண்ணுற்று - பாதுகாக்கும் செங்கோல் வேந்தனைக் கண்டு; ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன - மறைந்திருந்த குறு நிலமன்னர் வெளியே புறப்பட்டாற் போல; கதிரவன் உதயம் செய்தான் - சூரியன் (கீழ்வானில்) உதித்தான்.
கொடுங்கோலனுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்தோர் செங்கோல் வேந்தன் தோன்ற வெளிப்பட்டாற்போல, இராவணன் கொடுமைக்கு அஞ்சி மறைந்திருந்த கதிரவன் இராமன் வருகையில் மறைவிடம் நீங்கி எழுந்தாற்போல் தோன்றினான் எனத் தற்குறிப்பேற்ற அணி திகழ உரைத்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fearing the cruelty of one who had might but no virtue of mercy,
- thinking it impossible to come out, while they suffered in anguish,
- then, when the proud one's pride was ended and they beheld their protector,
- like those in hiding who come out into the open, the sun rose.
What the poem says
Sunrise is given an imagined cause. Under a tyrant, people hide in fear. When his arrogance is broken and a just protector appears, they come out into the open again. The sun, too, had been hiding in fear of Irāvaṇaṉ's cruelty, and now, with Irāmaṉ at hand, it dares to rise.