கம்பராமாயணம் 7018 · யுத்த 13.3

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரக்கர் கோன் அதனைக் கேட்டான், ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;
குரங்கு இனத்து இறைவன் நின்றான், ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;
‘இரக்கமது இழுக்கம் ‘என்றான், இளையவன்; ‘இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

அரக்கர் கோன் - அரக்கர்களின் மன்னனாக ஆக்கப் பெற்றுள்ள வீடணன்; அதனைக் கேட்டான் - இராமபிரான் கூறிய சொற்களைக் கேட்டு; அழகிற்றே ஆகும் என்றான் - நன்றாயுள்ளது என்று பாராட்டினான்; குரக்கினத்து இறைவன் - வானரங்களின் மன்னனாகிய சுக்கிரீவன்; நின்றான் - எழுந்து நின்றவனாய்; கொற்றவற்கு ஏற்றது என்றான் - (அரச தருமம் கடைப்பிடிக்கும்) வேந்தருக்கு ஏற்றதே இது என்றான்; இளையவன் - இளையோன் ஆகிய இலக்குவன்; இரக்கமது இனி இழுக்கு என்றான் - (அரக்கனிடம் இனி) இரக்கம் காட்டுவது இழுக்காகும் என்றான்; நாம் அம்பு துரக்குவது அல்லால் - நாம் இனி (அவ்வரக்கனிடம்) அம்பைச் செலுத்தி அம்பால் சொல்வது அன்றி; வேறு ஓர் சொல் உண்டோ? - (சொல்லால் பேசுவதற்கு) வேறு ஓர் சொல்லும் உண்டோ? என்னச் சொன்னான் - என்று வெகுண்டு கூறினான்.

தனக்கு அரசுரிமை வேண்டும் என்ற நினைவின்றித் தன் தமையனாகிய இராவணன் போரில் மாளாது இராமனால் உய்தி பெறவேண்டும் எனும் நினைவினனாகி, இராவணன் பால் தூதனுப்புவதனை, "அழகிற்றே ஆகும்" என மொழிந்த வீடணன் உள்ளத்தை அவ்விரண்டே சொற்கள் காட்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the demons heard it and said, "That would be fine indeed."
  2. The lord of the monkey race stood up and said, "It befits kings."
  3. The younger brother said, "Pity is a fault now; from here on, other than
  4. our loosing arrows, is there any other word to say?" So he spoke.

What the poem says

Each of Irāmaṉ's companions answers. Vīṭaṇaṉ, already crowned king of the demons, says simply that it is a fine idea. Those few words show his heart: he wants no throne for himself, only that his brother be saved instead of dying in battle. Cukkirīvaṉ agrees that it suits a king who follows royal dharma.

Ilakkuvaṉ objects angrily: mercy towards this demon is now a weakness, and the only language left is arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkar kōṉ ataṉaik kēṭṭāṉ, ‘aḻakiṟṟē ākum ‘eṉṟāṉ;
kurakkiṉattu iṟaivaṉ niṉṟāṉ, ‘koṟṟavarkku uṟṟatu ‘eṉṟāṉ;
‘irakkamatu iḻukkam ‘eṉṟāṉ, iḷaiyavaṉ; ‘iṉi, nām ampu
turakkuvatu allāl, vēṟu ōr col uṇṭō? ‘eṉṉac coṉṉāṉ.