கம்பராமாயணம் 7019 · யுத்த 13.4

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேசியைச் சிறையில் வைத்தான் - (நீ தூது விட நினைக்கும் அவ்வரக்கன் இராவணன் கற்பின் ஒளி வடிவினளான பிராட்டியைச் சிறையில் (வஞ்சத்தால் கவர்ந்து) வைத்துள்ளான்; தேவரை இடுக்கண் செய்தான் - தேவர்கட்குச் (சொல்லொணாத்) துன்பங்கள் (பல) செய்தான்; பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் - மண்ணுலகத் தேவர்களாகிய (செந்தண்மை பூண்ட) அந்தணர்கட்கு இன்னல் பல செய்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான் - நிலை பெற்ற உயிர்களைப் பிரித்துக் கொன்று (அவை வாழ்ந்த உடல்களைத்) தின்றான்; ஆசையின் அளவும் - திக்குகளின் எல்லை வரையிலும்; எல்லா உலகமும் - (இருக்கின்ற எல்லா உலகங்களையும்; தானே ஆள்வான் - (பிறர் ஆள விடாதபடி) அவனே ஆண்டு வருகின்றான்; வாசவன் திருவும் கொண்டான் - இந்திர உலகத்துச் செல்வங்களையும் கொள்ளை கொண்டான்; வழியலா வழி மேற்செல்வான் - (இவை யாவற்றையும்விட) நெறியல்லாத நெறியிற் சென்று கொண்டுள்ளான்.

"இரக்கமது இழுக்கு" எனக் கூறிய தன் கருத்துக்குச் சான்று. இது முதல் நான்கு பாடல்களில் நிறுவுகின்றான் இலக்குவன். தேசி - கற்பின் ஒளிவடிவாகிய பெருமாட்டி சீதை. தேசு - ஒளி. தேசி என்பதற்கு சூரியன் எனவும் இந்திரன் எனவும் பொருள் உரைப்பர். தேவரை - உருபு மயக்கம். நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He has kept the radiant lady in prison; he has brought affliction on the gods;
  2. he has given grief to the gods of the earth; he has struck down living beings and eaten them;
  3. to the very ends of the quarters he alone rules all the worlds;
  4. he has seized even Vācavaṉ's wealth; he walks a path that is no path."

What the poem says

In four verses, of which this is the first, Ilakkuvaṉ argues that mercy towards Irāvaṇaṉ would be wrong. He lists the crimes. Irāvaṇaṉ holds Cītai, the radiant embodiment of chastity, prisoner. He has tormented the gods and the Brahmins, "the gods on earth." He kills and eats living creatures, rules every world by force, and has plundered the wealth of Vācavaṉ (Intiraṉ). In everything he takes the wrong road.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēciyaic ciṟaiyil vaittāṉ; tēvarai iṭukkaṇ ceytāṉ;
pūcurarkku alakkaṇ īntāṉ; maṉṉuyir puṭaittut tiṉṟāṉ;
ācaiyiṉ aḷavum, ellā ulakamum tāṉē āḷvāṉ,
vācavaṉ tiruvum koṇṭāṉ; vaḻi alā vaḻimēl celvāṉ.