கம்பராமாயணம் 7022 · யுத்த 13.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறந்தரு தவத்தை ஆயும் அறிவினால் - அறத்தை விளைக்கின்ற பொறுமையெனும் நெறியைக் கைக்கொள்ளும் உன் புத்தியால்; அவற்றை முற்றும் மறந்தனை - வீடணனுக்கும் முனிவர்கட்கும் கூறிய உறுதிமொழிகளையும் இராவணன் இழைத்துள்ள தீங்குகளையும் முற்றும் மறந்து போனாய்! எனினும் - என்றாலும்; மற்று - மேலும்; இவ் இலங்கையின் வளமை நோக்கி - இந்த இலங்கை மாநகரத்தின் வளங்களையெல்லாம் பார்த்து; இது இறந்து போதல் தீது என்று இரங்கினை - இந்த (அழகு) நகரம் அழிந்து போவது நலமன்று என்று நினைத்து இரக்கம் கொண்டாய்; எனினும் எண்ணின் - என்றாலும் ஆராய்ந்து நோக்கின்; சிறந்தது போரே என்றான் - (இராவணனிடம் இப்போது புரிதற்குரிய) சிறந்த செயல் யுத்தமே என்றான் (இலக்குவன்); சேவகன் முறுவல் செய்தான் - (அது கேட்டுச்) சிறந்தபெரு வீரனாகிய இராமனும் புன்னகை பூத்தான்.
இலக்குவன், பிராட்டியின் நலமும், அவள் கணவனாகிய தன் நலமும் பேணுவதில் எத்தனை வேகமும் விழிப்பும் ஆர்வமும் கொண்டுள்ளான் எனும் நினைவாலும், "தூது தோற்கப்போகிறது; நீ விரும்பும் போர்தான் நிகழப்போகிறது; ஆனாலும் உலகுக்காகத்தான் தூது அனுப்பப்போகிறேன்" எனும் நினைவாலும் இராமபிரான் புன்னகை பூத்தான் போலும். சேவகன் - பெருவீரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Whether, through a mind that seeks the forbearance that yields dharma,
- you have forgotten all of these, or whether, seeing the riches of this Ilaṅkai,
- you pity it, thinking 'it would be wrong for this to perish', yet, weighing it,
- war is best," he said. The hero smiled.
What the poem says
Ilakkuvaṉ ends his argument. Perhaps Irāmaṉ's patient nature has made him forget all these crimes and promises, or perhaps he pities the beautiful city and does not want it destroyed. Either way, Ilakkuvaṉ says, war is the right course.
Irāmaṉ smiles. He is touched by his brother's fierce care for Cītai and for himself. He also knows the embassy will fail and the war Ilakkuvaṉ wants will come anyway; he is sending an envoy for the world's sake.