கம்பராமாயணம் 7023 · யுத்த 13.8

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அயர்த்திலன்; முடிவும் அஃதே; ஆயினும் அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத் துறை; அறனும் அஃதே ‘என்று இவை சமையச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

அயர்த்திலென் - (இலக்குவனை நோக்கி) இராவணன் தீமைகளையும், முனிவர் வீடணன் ஆகியோர்க்குத் தந்த வாய் மொழிகளையும் நான் மறக்கவில்லை; முடிவும் அஃதே - இறுதியில் நடக்கப் போவது போரேயாகும்; ஆயினும் - ஆனாலும்; அறிஞர் ஆய்ந்த - தேவகுருவான வியாழ பகவானும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரும் ஆராய்ந்து கூறியுள்ள; நயத்துறை நூலின்நீதி - அரசியல்துறை பற்றிய நூல்களின் நீதிகளை; நாம் - (போற்றிக்காக்க வேண்டிய) நாமே; துறந்து உறைதல் நன்றோ? - அவற்றை நீக்கி வாழ நினைத்தல் நன்றாமோ? புயத்துறை வலியரேனும் - தோளிலே உறையும் வலிமை மிக்காரே யானாலும்; பொறையொடும் பொருந்தி வாழ்தல் - பொறுமை பூண்டு வாழ்வதே; சயத்துறை - வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும்; அறனும் அஃதே - அரச நீதியும் அவ்வாறே கூறுகிறது; என்று இவை - என்று இத்தகைய மொழிகளை; சமையச் சொன்னான் - (இலக்குவன் மனத்தில்) பதியுமாறு இராமபிரான் கூறினான்.

"முடிவும் அஃதே" என்பது அரசநீதியின் முடிவாகிய தண்டம் எனும் போரைக்குறித்தது. வியாழபகவான் எழுதிய அரசநீதி நூல் பார்ஹச பத்தியம்; சுக்கிரர் எழுதியது சுக்கிர நீதி. ஆதி மனு வரைந்தது மனுநீதி சாத்திரம். இவையெல்லாம் நயத்துறை - நீதி நூல்கள். நயம் என்பது இங்கு நீதியைக் குறித்து, அதனைச் செயல்படுத்தும் அரச குலத்தைச் சுட்டி நின்றது. "புயத்து உறை வலியர்" என்பது தோள் வலிமை மிக்க பேரரசரைக் குறித்தது. தோள் வலிமையினும் பொறுமையே வலிது என்பது இராமனின் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have not forgotten, and that is how it will end; and yet the rule of the books
  2. of statecraft, which the wise have studied: is it good for us to abandon it?
  3. Even for those whose strength dwells in their arms, to live joined with forbearance
  4. is the path to victory, and dharma says the same." So he spoke, to settle it.

What the poem says

Irāmaṉ answers calmly. He has forgotten neither Irāvaṇaṉ's crimes nor his own promises, and he knows it will end in war, the final measure that the science of kingship allows. But the treatises on statecraft, written by the gurus of the gods and of the demons and by Maṉu, require that other means be tried first. Should a king abandon those rules?

For Irāmaṉ, patience is a greater strength than the strength of one's arms, and it is what leads to victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ayarttileṉ; muṭivum aḵtē; āyiṉum aṟiñar āynta
nayat tuṟai nūliṉ nīti nām tuṟantu amaital naṉṟō?
puyat tuṟai valiyarēṉum, poṟaiyoṭum porunti vāḻtal
cayat tuṟai; aṟaṉum aḵtē ‘eṉṟu ivai camaiyac coṉṉāṉ.