கம்பராமாயணம் 7025 · யுத்த 13.10

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நன்று ‘என, அவனைக் கூவி, ‘நம்பி! நீ நண்ணலார்பால்
சென்று, இரண்டு யின் ஒன்றைச் செப்பினை தருதி ‘என்றான்;
அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன்தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமே?

பொருள் · Meaning in Tamil

நன்று என - சுக்கிரீவன், வீடணன் முதலியோர், 'நல்லது நல்லது' என்று கூற; அவனைக் கூவி - அங்கதனை அழைத்து; நம்பி! நீ - நற்குணங்கள் அமைந்தவனே! நண்ணலார் பால் சென்று - பகைவர் பால் சென்று; இரண்டு உரையின் - நான் கூறும் இரண்டு சொற்களைச்; செப்பினை - சொல்லி; ஒன்றைத் திரிதி - அவற்றுள் அவன் இசைந்த ஒன்றை (அறிந்து) திரும்புவாயாக; என்றான் - என்றான்; அன்று - அப்போது; அவன் அருளப்பெற்ற - அந்த இராமனால் (பணி செய்ய) அருளப்பெற்ற; ஆண் தகை - (பேராளனாகிய) ஆண்மைப் பண்புகள் அனைத்தும் அமையப் பெற்றவனான அங்கதன்; அலங்கல் பொன்தோள் - மாலை புனைந்த அழகிய தோள்கள்; குன்றினும் உயர்ந்தது என்றால் - குன்றுகளை விட உயர்ந்து ஓங்கின என்றால்; மன நிலை கூறல் ஆமோ? - அவன் உள்ளத்து உவகை நிலையை உரைக்க முடியுமோ?

நம்பி - புருடோத்தமன், ஆண்தகை, குணபூரணன் முதலிய சொற்களின் பரியாயச் சொல். இராமபிரான் திருவாயால் 'நம்பி' என்றும், 'நான் சொல்வதில் இரண்டில் ஒன்று தெரிந்து வா' என்றும் அன்பும் கட்டளையும் அமைய அறிவிக்கப்பெற்ற பெருமிதப் பேற்றால், அங்கதன் தோள்கள் குன்று போல் உயர்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When all said "Good," he called him: "Noble one! Go to the enemy,
  2. speak my two words, and come back with the one he chooses," he said;
  3. and when, that day, the golden garlanded shoulders of that manly one, so favoured by him,
  4. rose higher than mountains, could anyone describe his state of mind?

What the poem says

Everyone approves, and Irāmaṉ calls Aṅkataṉ. Addressing him as "noble one," he tells him to carry two alternatives to the enemy and come back with whichever is chosen. Chosen by Irāmaṉ, spoken to with affection and given a command, Aṅkataṉ swells with pride. His shoulders seem to rise higher than mountains, and his joy cannot be put into words.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘naṉṟu ‘eṉa, avaṉaik kūvi, ‘nampi! nī naṇṇalārpāl
ceṉṟu, iraṇṭu uraiyiṉ oṉṟaic ceppiṉai tiriti ‘eṉṟāṉ;
aṉṟu avaṉ aruḷap peṟṟa āṇtakai alaṅkal poṉ tōḷ
kuṉṟiṉum uyarntatueṉṟāl, maṉa nilai kūṟalāmō?