கம்பராமாயணம் 7026 · யுத்த 13.11

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘என் அவற்கு ப்பது? ‘என்ன, ‘ஏந்திழையாளை விட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்று எனின், தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் நன்றோ?
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக ‘‘ எனச் சொல்லிடு ‘என்றான

பொருள் · Meaning in Tamil

அவற்கு உரைப்பது என் என - (அங்கதன் இராமபிரானை நோக்கி) (அடியேன் சென்று) அந்த இராவணனுக்கு உரைக்க வேண்டியவை என்ன என்று விண்ணப்பிக்க; ஏந்திழையாளை விட்டு - உயர்ந்த அணிகளையணிந்த சீதா தேவியைச் சிறையிலிருந்து விடுதலை செய்து; தன் உயிர் பெறுதல் நன்றோ? - தன்னுடைய உயிரை (இழக்காமல்) பெறுதல் நல்லதா? அன்று எனில் - அல்லாது போனால்; தலைகள் பத்தும் - உன்னுடைய பத்துத் தலைகளும்; சின்ன பின்னங்கள் செய்ய - (என் அம்புகளினால்) கண்டதுண்டமாக்கப்பட்டு; செருக்களம் சேர்தல் நன்றோ? - போர்க்களத்தில் கிடப்பது நல்லதா? சொன்னவை - நான் கூறியவற்றுள்; இரண்டின் ஒன்றே துணிக - இரண்டில் ஒன்றையே தேர்ந்து சொல்லுக; எனச் சொல்லிடு - என்று இராவணனிடம் கூறிவருக என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What am I to tell him?" he asked. "'Is it good to release the bejewelled lady
  2. and keep your life? Or else, with all ten of your heads
  3. hacked to pieces, is it good to come to the battlefield?
  4. Of the two things said, choose one': tell him that," he said.

What the poem says

Aṅkataṉ asks what message to carry. Irāmaṉ gives it plainly. Irāvaṇaṉ can free Cītai and keep his life, or he can come to the battlefield and have his ten heads cut to pieces by Irāmaṉ's arrows. He must choose one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉ avaṟku uraippatu? ‘eṉṉa, ‘ēntiḻaiyāḷai viṭṭut
taṉ uyir peṟutal naṉṟō? aṉṟueṉiṉ, talaikaḷ pattum
ciṉṉapiṉṉaṅkaḷ ceyya, cerukkaḷam cērtal naṉṟō?
coṉṉavai iraṇṭiṉ oṉṟē tuṇika ‘‘ eṉac colliṭu ‘eṉṟāṉ