கம்பராமாயணம் 7028 · யுத்த 13.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாருதி அல்லன் ஆகின் நீ - 'அநுமன் இல்லாவிட்டால் (அந்த இடத்தை நிரப்புகிறவன்) நீயே' எனும் மாற்றம் பெற்றேன் - என்று உரைக்கும் இராம வாக்கைப் பெற்றுவிட்டேன்; இனி என்னோடு ஒப்பார் யார்? - இனி எனக்கு நிகராவார் உலகில் யாருளர்? என்பதோர் - என்று சொல்லவல்ல ஒப்பற்றதொரு; இன்பம் பெற்றான் - பேரின்பத்தினை யடைந்தவனான அங்கதன்; பார் மிசை வணங்கி - (இராமபிரானை மண் மேல் (தன் அங்கங்கள் பட) வீழ்ந்து வணங்கி; சீயம் விண்மிசைப் படர்வதே போல் - சிங்கம் (ஒன்று) வான் வழியே பாய்ந்து செல்வது போல்; வீரன் வெஞ்சிலையில் கோத்த அம்பு என - இராமபிரானின் கடிய கோதண்டம் எனும் வில்லில் பூட்டிய அம்புபோல்; விசையிற் போனான் - விரைந்து (இராவணன் இருப்பிடம் நோக்கிச்) சென்றான்.
அனுமனை விடுத்து அங்கதனைத் தேர்ந்தமைக்கு உரிய விளக்கம் மேல் (6982) கூறப்பட்டது. தூதுரைத்து இராமனிடம் மீளும் அங்கதனுக்கு, குறியைத் தவறாமல் தாக்கி மீண்டும் இராமன் தூணிக்கே திரும்பி வரும் இராமபாணம் அழகிய உவமை. "வீரர்களுள் நான் இராமனாயிருக்கிறேன்" (கீதை) என்பது கீதையில் கண்ணன் கூற்றாதலால், இராமபிரானை "வீரன்" என்றார். "அநுமன் இல்லையேல் அங்கதன்" எனும் பழமொழி, இப்பாடலின் பின்னர்த் தோன்றியிருக்க வேண்டும். ஆண்மைத் தோற்றத்துடன் அஞ்சாமல் செல்வதற்குச் சிங்கமும், தவறாமல் குறியையடைந்து தாக்கி மீளுதற்கு இராமன் அம்பும் உவமைகள். சீயம் விண்மிசை படர்வது - இல்பொருள் உவமை அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bowing to the ground, then like a lion bounding across the sky,
- like an arrow set on the hero's fierce bow, he went with speed;
- "I have been given the word, 'If not Māruti, then you';
- who now can equal me?": such was the joy he felt.
What the poem says
Aṅkataṉ is overjoyed. Irāmaṉ has in effect said "if not Aṉumaṉ, then you," and Aṅkataṉ feels that no one in the world can now match him. He bows to the ground and races off to Ilaṅkai.
Two images describe him. He is like a lion leaping through the sky, an imagined sight that stands for his fearless bearing. He is also like an arrow from Irāmaṉ's bow, which always hits its mark and returns, as Aṅkataṉ will deliver his message and come back. A later saying, "if not Aṉumaṉ, then Aṅkataṉ," probably grew out of this verse.