கம்பராமாயணம் 7030 · யுத்த 13.15

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனுமன் கொல் என்ன அஞ்சி - (அங்கதனைக் கண்ணுற்ற அரக்கர்கள் முன்பு வந்து போன) அனுமனோ (மீண்டு வந்தான்) என்று அஞ்சி; அழுகின்ற கண்ணர் ஆகி - நீர் ஒழுகும் கண்களையுடையவர் ஆகி; தொழுகின்ற சுற்றம் சுற்ற - தங்கட்கு இடையூறு அடையாமல் காத்திடுக எனக் கைதொழுது நிற்கின்ற சுற்றத்தால் தன்னைச் சுற்றிக் கொள்ளவும்; சொல்லிய துறைகள் தோறும் - அரசியலிலும் பொருளியலிலும் கூறப்பட்டுள்ள துறைகள் யாவற்றிற்கும்; மொழிகின்ற வீரர் வார்த்தை - பணியாற்றக் கூறப்பட்டுள்ள வீரர்களின் விண்ணப்பங்கள்; முகம்தொறும் செவியின் மூழ்க - பத்து முகங்களிலும் உள்ள இருபது காதுகளிலும் வீழவும்; எழுகின்ற சேனை நோக்கி - இதற்கிடையில் போருக்குப் புறப்படுகின்ற சேனைகளைப் பார்வையிட்டவாறும்; இயைந்திருந்தானை - அமர்ந்திருந்த இராவணனை; கண்டான் - (அங்கதன்) பார்த்தான்.

அவற்றைச் செவியில் வாங்கி, நெஞ்சத்தில் ஆழ்த்தி இராவணன் சிந்திக்கின்றான் என்பது தோன்ற, "வீரர் வார்த்தை முகம் தொறும் செவியின் மூழ்க" என உரைத்த திறனை நோக்குக. "கண்ணிற் சொல்லி செவியில் பார்க்கும் வல்லுநர்" என நாடாளும் மன்னரை குமர குருபரரும் இதனால் உரைப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With weeping eyes, afraid it might be Aṉumaṉ again,
  2. his kin stood round him with folded hands; in every branch of rule laid down,
  3. the words of the warriors reporting sank into the ears of each of his faces;
  4. watching the army rising for battle, composed he sat; and so Aṅkataṉ saw him.

What the poem says

Aṅkataṉ sees Irāvaṇaṉ holding court. The demons around the king have mistaken Aṅkataṉ for Aṉumaṉ, who burned their city, and they weep with fear and fold their hands, begging the king to protect them.

Irāvaṇaṉ sits calmly. Officers from every department report to him, and their words "sink into" the ears of his ten faces, which means he takes everything in and thinks it over. Meanwhile he keeps watch on the army marching out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻukiṉṟa kaṇṇar āki, ‘anumaṉkol? ‘eṉṉa añcit
toḻukiṉṟa cuṟṟam cuṟṟa, colliya tuṟaikaḷtōṟum
moḻikiṉṟa vīrar vārttai mukamtoṟum ceviyiṉ mūḻka,
eḻukiṉṟa cēṉai nōkki, iyaintu iruntāṉaik kaṇṭāṉ.