கம்பராமாயணம் 7032 · யுத்த 13.17

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இன்று இவன் தன்னை எய்த நோக்கினேற்கு, எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில் வில்லின்மேல் கணை ஒன்று ஏவிக்
கொன்றவன் தானே வந்தான் என்று உடன் குறிப்பின் அல்லால்
ஒன்று இவன் தன்னைச் செய்யவல்லரோ, உயிர்க்கு நல்லார்?

பொருள் · Meaning in Tamil

இன்று இவன் தன்மை எய்த நோக்கினேற்கு - இப்பொழுது இந்த இராவணனுடைய நிலையை நன்கு ஊன்றிக் கவனித்த எனக்கு; எதிர்ந்த போரில் - விளைந்துள்ள போரில்; என் தந்தை மார்பின் - (இவனை வென்ற) என் தந்தையாகிய வாலியின் மார்பில்; வில்லின் மேல் கணை ஒன்று ஏவி - வில்லில் கணை ஒன்று தொடுத்து; கொன்றவன் தானே - கொன்றவனான இராமபிரான் தானே; வந்தான் என்று - இப்போது இவனைக் கொல்ல வந்துள்ளான் என்று; உடன் குறிப்பின் அல்லால் - இச்செய்தியையும் உடன் சேர்த்து உணர்ந்து கொள்ளலாமே யன்றி; உயிர்க்கு நல்லார் - உயிர்க்கு நலம் செய்யக் கருதுபவர்கள்; இவன் தன்னை - இந்த இராவணனை; ஒன்று செய்யவல்லரோ? - எந்த ஒரு செயலாலும் தீங்கு செய்ய வல்ல இயலுமோ?

வாலியை வென்ற இராமனாலன்றிப் பிறரால் இவனுக்கு, எள் முனையளவு சிறுதீங்கும் செய்து விட இயலாது என்று அங்கதன் கருதுகின்றான். இராவணன் திக்கு விசயம் செய்கையில் வாலியோடு எதிர்த்ததனால் அவன் வெகுண்டு வாலிற் கட்டியவாறு, திசைகள்தோறும் பறந்து சிவபூசனை செய்து, கிட்கிந்தை திரும்புகையில், தாரை வேண்டியபடி இராவணனை வாலிலிருந்து விடுவித்தான் என்று உத்தரகாண்டம் வாலி வாலாற் கட்டுண்ட படலத்தில் உரைக்கப்படும். "மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன், தொக்கத் தோளுறத் தொடர்படுத்த நாள்" (கம்ப. 3833) எனக் கவிஞர் பிரானாலும் இந்நிகழ்ச்சி குறிக்கப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To me, who have looked closely at his nature today: in the battle he met,
  2. my father defeated him; and with one arrow loosed from the bow at that father's breast,
  3. the one who killed him has himself come: apart from grasping that as well,
  4. could even those who wish all living things well do anything to this one?"

What the poem says

Aṅkataṉ continues his thoughts. His father Vālī once defeated Irāvaṇaṉ; an episode told in the Uttara Kāṇṭam has Vālī tying him up in his tail and flying round the world with him. And Irāmaṉ killed Vālī with a single arrow.

So only the one who killed Irāvaṇaṉ's conqueror can harm Irāvaṇaṉ, and that one has now arrived. No one else, not even the gods who wish the world well, could do him the slightest damage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṉṟu ivaṉ taṉmai eyta nōkkiṉēṟku, etirnta pōril
veṉṟa eṉ tātai mārpiṉ villiṉmēl kaṇai oṉṟu ēvik
koṉṟavaṉtāṉē vantāṉ eṉṟu uṭaṉ kuṟippiṉ allāl
oṉṟu ivaṉtaṉṉaic ceyya vallarō, uyirkku nallār?