கம்பராமாயணம் 7033 · யுத்த 13.18

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த ஆசைப்
பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர் படிக் கண்? பேழ்வாய்ப்
பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் ‘அன்றே.

பொருள் · Meaning in Tamil

அணி பறித்து - ஆபரணங்களைக் களைந்து (அவையின்றியே); அழகு செய்யும் - அழகு மிக விளங்கும்; அணங்கின் மேல் வைத்த ஆசை - பிராட்டியின் மீது கொண்ட இச்சையாகிய; பிணி பறித்து - (காம) நோயை வேரொடும் களைந்து; படிக்கண் இவனை - (இப்) பூமியிலே இவ்வலிய அரக்கனை; யாவர் முடிப்பவர் - யாரே அழிக்க வல்லார்? பேழ்வாய் - பிளந்த வாயினையுடைய; பணி பறித்து எழுந்த - பாம்பின் (மணியினைக்) கவர்ந்து கொண்டெழுந்த; மானக் கலுழனின் - பெருமைக்குரிய கருடனைப் போல; மணி பறித்து எழுந்த - இவனுடைய மகுடத்தின் மணியைப் பறித்துக் கொண்டுவந்த; எந்தை - என்னுடைய தந்தையான சுக்கிரீவன்; யாரினும் வலியன் - எல்லோரிலும் வலியவனே! என்றான் அங்கதன்.

"கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்" (சிலம்பு. 16.9.11) என அணி அணியாக கோலத்தோடு வந்த கண்ணகியின் அழகினை இளங்கோவடிகள் போற்றியமையை இங்கு நினைவு கூர்தல் தகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The desire he has set on the lady who grows lovelier for stripping off her jewels:
  2. tearing out that sickness, who on earth could make an end of him? Like proud Garuḍa
  3. that rose having snatched the serpent of gaping mouth, he who seized this one
  4. and rose with the gems torn from him, my father, is mightier than all," he said.

What the poem says

Aṅkataṉ goes on musing. Who on earth could kill Irāvaṇaṉ and so cure his lust for Cītai, who is more beautiful without her ornaments than with them?

Even so, Cukkirīvaṉ, whom Aṅkataṉ calls "my father," grabbed this mighty king and came away with his crown jewels, like Garuḍa carrying off a serpent's gem. That makes him the strongest of all. The commentary compares Iḷaṅkōvaṭikaḷ's praise of Kaṇṇaki, whose unadorned beauty outshone the jewels of the city's women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṇi paṟittu aḻaku ceyyum aṇaṅkiṉmēl vaitta ācaip
piṇi paṟittu, ivaṉai yāvar muṭippavar paṭikkaṇ? pēḻ vāyp
paṇi paṟittu eḻunta māṉak kaluḻaṉiṉ, ivaṉaip paṟṟi
maṇi paṟittu eḻunta entai yāriṉum valiyaṉ ‘eṉṟāṉ.