கம்பராமாயணம் 7034 · யுத்த 13.19

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெடுந்தகை விடுத்த தூதன் இவை இவை நிரம்ப எண்ணி,
கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி,
விடும் சுடர் மகுடம் மின்ன, விரிகடல் இருந்தது அன்ன
கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று குறுகி நின்றான்.

பொருள் · Meaning in Tamil

நெடுந்தகை - பெருங்குணங்கள் நிறைந்த இராமபிரான்; விடுத்த தூதன் இனையன - அனுப்பிய தூதனான அங்கதன் இவ்வாறான நினைவுகளை; நிரம்ப எண்ணி - நெஞ்சில் நிறைய எண்ணியவனாய்; விரிகடல் - பரந்து பட்ட கடல் ஆனது; கடுங்கனல் - கொடிய தீயும்; விடமும் கூற்றும் - நஞ்சும் யமனும்; கலந்து - (ஆகிய மூன்றையும்) ஒன்றாகக்கூட்டி; கால்கரமும் காட்டி - கால்களையும் கைகளையும் உண்டாக்கிக்கொண்டு; சுடர் விடும் மகுடம் மின்ன இருந்தது என்ன - ஒளி உமிழ்கின்ற மகுடம் தன் உச்சியில் மின்னுமாறு அமர்ந்திருந்தது என்று கூறுமாறு (அமர்ந்திருந்த); கொடுந்தொழில் - கொடுமைத் தொழிலையே கொண்டுள்ள; மடங்கல் அன்னான் - சிங்கம் போன்றவனான இராவணனுக்கு; எதிர் சென்று - நேர் எதிராகப் போய்; குறுகி நின்றான் - இடைவெளி குறுகுமாறு அருகே நின்றான்.

இராவணன் தோற்றம் - இல்பொருள் உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The envoy sent by the great one, thinking such thoughts to the full,
  2. went before him who seemed fierce fire, poison and death mixed together, given feet and hands,
  3. with a crown flashing its light, as if the wide sea itself sat there:
  4. that lion of cruel deeds; and he went up close and stood near him.

What the poem says

With these thoughts, Aṅkataṉ walks up and stands close in front of Irāvaṇaṉ. The poet describes the king with an imagined image: as if the vast sea had mixed fire, poison and death together, grown hands and feet, put on a blazing crown and sat down on a throne. He is a lion whose only trade is cruelty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṭuntakai viṭutta tūtaṉ iṉaiyaṉa nirampa eṇṇi,
kaṭuṅ kaṉal viṭamum kūṟṟum kalantu kāl karamum kāṭṭi,
viṭum cuṭar makuṭam miṉṉa, viri kaṭal iruntatu aṉṉa
koṭun toḻil maṭaṅkal aṉṉāṉ etir ceṉṟu kuṟuki niṉṟāṉ.