கம்பராமாயணம் 7037 · யுத்த 13.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரன் கொல் ஆம்? - (அங்கதன் கூறியவை கேட்ட இராவணன்) சிவபெருமானோ? அன்றி அரி கொல் ஆம்? - அல்லாமல் திருமாலோ? மற்று அயன் கொல் ஆம்? - இவர்கள் இருவரும் அல்லாமல் நான்முகனோ? என்பார் - (நீ கூறிய பூத நாயகனாக முதலாய) புகழுக்குரிய தலைவன்; அன்றி - (உன் தலைவன் அவர்களைப் போல்) அல்லாமல்; குரங்கு எலாம் கூட்டி - குரங்குகளையெல்லாம் படையென்று திரட்டிக்கொண்டு; வேலைக் குட்டத்தைச் சேது கட்டி - சிறு குட்டை போன்ற ஒரு கடற்பகுதியில் அணைகட்டி; இரங்குவான் ஆகில் இன்னம் அறிதியென்று - (அதனை ஒரு வீரச் செயலாகவும் அதனால் தன்னை வீரனாகவும் கருதி) இந்த நிலையிலும் இராவணன் செய்ததற்கு இரங்குகின்றானா? என்று அறிந்து வா என்று; உன்னை ஏவும் - உன்னைத் தூதனாக ஏவியுள்ள; நரன் கொலாம் - அந்த மனிதன் தானோ? உலக நாதன் - உலகத்திற்கு நாயகன்? என்று கொண்டு - என்று சொல்லிக்கொண்டே; அரக்கன் நக்கான் - இராவணன் எள்ளிச் சிரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Not one of those of whom men wonder, 'Is it Araṉ? Is it Ari? Or Ayaṉ?',
- but one who gathered up all the monkeys and dammed a puddle of sea,
- and sends you saying, 'Go and find out whether he is sorry yet':
- is that man the lord of the world?" So saying, the demon laughed.
What the poem says
Irāvaṇaṉ mocks Aṅkataṉ's claim. A true lord of the world would be Civaṉ (Araṉ), Tirumāl (Ari) or Piramaṉ (Ayaṉ). Instead, this "lord" is a mere man who collected a troop of monkeys, built a dam across what Irāvaṇaṉ calls a little puddle of sea, thinks that makes him a hero, and now sends someone to ask whether Irāvaṇaṉ is sorry.