கம்பராமாயணம் 7038 · யுத்த 13.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் - கங்கையாற்றையும் பிறை நிலவையும் சடையிற் சூடியுள்ள நெற்றிக் கண்ணனான சிவபெருமான்; கரத்து நேமி சங்கமும் தரித்த மால் - தன் கரங்களில் சக்கரமும் சங்கும் தாங்கிய திருமால்; மற்று இந்நகர் தன்னைச் சாரார் - (ஆகிய இருவரும்) இந்த இலங்கை நகருக்குள் (அச்சத்தால்) வரமாட்டார்கள்; அங்கு அவர் நிலமை நிற்க - அவ்வாறு அவர் நிலமையேயிருக்கையில்; மனிசனுக்காக அஞ்சாது - (கேவலம்) மனிதன் ஒருவனுக்காக இவ்விலங்கைக்குள் அச்சமின்றித் துணிந்து; இங்கு வந்து - என் (அத்தாணி) மண்டபத்திற்குள் நுழைந்து; இதனைச் சொன்ன - இந்த வார்த்தைகளைக் கூறிய; தூதன் நீ - தூதனாகிய நீ; யாவன்? என்றான் - யார்? என்று கேட்டான் இராவணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The brow-eyed one who wears the Gaṅgā and the crescent moon, and Māl who holds
- the discus and the conch in his hands, will not come near this city;
- their case being so, you who, for the sake of a man, without fear,
- came here and spoke these words: who are you, envoy?" he said.
What the poem says
Irāvaṇaṉ presses his question. Not even Civaṉ, with the Gaṅgā and the crescent moon in his hair and the eye on his forehead, or Tirumāl with his discus and conch, dares to come near Ilaṅkai. So who is this envoy who walks fearlessly into the royal hall and says such things, all on behalf of a mere man?