கம்பராமாயணம் 7042 · யுத்த 13.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்நரர் - "அந்த மனிதர்கள்"; இன்று நாளை - இன்றோ நாளையோ; அழிவதற்கு ஐயம் இல்லை - இறந்தொழிந்து போவதற்குச் (சிறிதும்) ஐயமே இல்லை; உன் அரசு - (பிறனுக்குத் தரப்பட்டுள்ள) உன்னுடைய அரசப் பொறுப்பினை; உனக்குத் தந்தேன் - (நான்) உனக்கு (இன்று) தந்து விட்டேன்; ஊழிக்காலம் ஆளுதி - யுக முடிவுக்காலம் வரையிலும் அதனை ஆளுவாயாக; அரி சுமந்த பொன்பீடத்து - சிங்கங்கள் சுமக்கும் பொன் ஆசனத்து; தேவர்கள் போற்றி செய்ய - தேவர்கள் போற்றிப் புகழ்ந்து வணங்குமாறு; மன்னவன் ஆதி - நீ வானர அரசன் ஆவாயாக; யானே மகுடம் சூட்டுவென் - நானே (என் கரங்களால்) உனக்கு மணிமுடி சூட்டி வைப்பேன் என்றான்.
இப்பாடலில் அங்கதனுக்கு ஆசையூட்டும் இராவணனின் திறம் காண்க. யானே - ஏகாரம் பிரிநிலை. தந்தேன் - துணிவு பற்றி வந்த காலவழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those men will perish, today or tomorrow, there is no doubt;
- I have given you your kingdom; rule it till the end of the age;
- on a golden throne borne up by lions, with the gods singing your praise,
- so that you may be king, I myself will set the crown on your head," he said.
What the poem says
Irāvaṇaṉ goes on with the bait. Irāmaṉ and Ilakkuvaṉ will die today or tomorrow. The monkey kingdom is already Aṅkataṉ's; Irāvaṇaṉ says "I have given" as if the deed were done, so sure is he. Aṅkataṉ will rule until the end of the age from a lion throne, with the gods singing his praises, and Irāvaṇaṉ will crown him with his own hands.