கம்பராமாயணம் 7043 · யுத்த 13.28

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கதன், அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கி,
துங்க வன்தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, நக்கான்;
“‘இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே “ என்பது உன்னி,
நுங்கள்பால் நின்றும் எம்பால் போந்தனன், நும்பி ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அங்கதன் அதனைக்கேளா - அங்கதன் இராவணனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு; அங்கையொடு அங்கைதாக்கி - அழகிய தன் கையோடு கையை அடித்து; துங்கவன் தோளும் மார்பும் - தன் தூய தோள்களும் மார்பும்; இலங்கையும் துளங்க நக்கான் - இலங்கை மாநகரும் குலுங்குமாறு (பேரொலியிட்டுச்) சிரித்து; இங்கு நின்றார்கட்கு எல்லாம் - இந்த இலங்கை நகரில் வாழும் அனைவர்க்கும்; இறுதியே என்பது உன்னி - இறுதி அழிவு உறுதி என்பதை நினைத்துத்தானே; உங்கள் பால் நின்றும் - உங்களிடத்திலிருந்து விலகி; உம்பி - உன் தம்பி வீடணன்; எம்பால் போந்தனன் - எங்கள் பக்கம் வந்தடைந்தான் என்றான்.

அங்கையொடு அங்கை தாக்கல் - எள்ளலின் வெளிப்பாடு. தோளும் மார்பும் குலுங்கச் சிரித்தான் என்பது இயல்பு. ஆயின் இலங்கையும் குலுங்கச் சிரித்தான் என்பது கம்ப முத்திரை. அங்கதன் சிரித்தான்; இலங்கை நடுங்கியது என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṅkataṉ, hearing this, struck palm against palm
  2. and laughed so that his lofty, strong shoulders and chest, and Ilaṅkai too, shook;
  3. "It was because he thought, 'For all who stand here it is the end,'
  4. that your own younger brother left your side and came over to ours," he said.

What the poem says

Aṅkataṉ claps his hands in scorn and roars with laughter. That his shoulders and chest shake is natural; that Ilaṅkai shakes too is Kampaṉ's own touch, hinting that the city trembles at him.

His retort is cutting: Irāvaṇaṉ's own brother Vīṭaṇaṉ left him and joined Irāmaṉ because he could see that everyone in Ilaṅkai is doomed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkataṉ, ataṉaik kēḷā, aṅkaiyōṭu aṅkai tākki,
tuṅka vaṉ tōḷum mārpum ilaṅkaiyum tuḷaṅka, nakkāṉ;
“‘iṅku niṉṟārkaṭku ellām iṟutiyē “ eṉpatu uṉṉi,
uṅkaḷpālniṉṟum empāl pōntaṉaṉ, umpi ‘eṉṟāṉ.